வேற்று கிரம மனிதர் ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து அந்த பெண்ணும் கர்ப்பமாகியுள்ளார் என்ற செய்தி நம்பமுடிகிறதா. ஆனால், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சக அறிக்கையில் பெண் கர்ப்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வானில் வேற்று கிரக மனிதர்கள் செல்லும் பறக்கும் தட்டை பார்த்ததாக வெளிநாட்டில் சிலர் கூறியதை ஊடகங்களில் கேள்விப்பட்டிருக்கிறோம். திரைப்படங்களில் பறக்கும்தட்டை பார்த்திருக்கிறோம்.
ஆனால், வேற்று கிரம மனிதர் ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து அந்த பெண்ணும் கர்ப்பமாகியுள்ளார் என்ற செய்தி நம்பமுடிகிறதா. ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம்.
அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகனின் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவிலிருந்து பெறப்பட்ட அறிக்கையில் இந்தத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தி சன் நாளேடு தெரிவித்துள்ளது.
வேற்று கிரகவாசிகள் குறித்தவிசித்திரமான உணர்வுகள், அனுபவங்களை அடைந்த மனிதர்கள் குறித்தும், அவர்களின் உடல்நலன் குறித்தும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறைவிசாரணை நடத்தி. மனித மற்றும் உயிரியல் திசுக்களில் முரண்பாடான, கடுமையான, தீவிரத்தன்மை குறைத்த விளைவுகள் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டது.
தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் பெறப்பட்டஅறிக்கை ஏறக்குறைய 1500 பக்கத்தில் அமெரிக்க மக்கள் சந்தித்த விசித்திரமான சம்பவங்கள், அனுபவங்கள், வேற்றுகிரகவாசிகளுடன் பாலியல் உறவு, அதனால் கர்ப்பம் உண்டாகுதல் போன்றவை தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில், சில நம்பத்தகுந்த தகவல்கள் இருந்தாலும், வேற்று கிரம மனிதருடன் பாலியல் உறவுகொண்டு கருத்தரித்தல் போன்ற செய்தி வியப்பை அளித்துள்ளன.
அந்த அறிக்கையில் வேற்றுகிரகவாசிகள், பறக்கும் தட்டு ஆகியவற்றை பார்த்தவர்கள் குறித்த விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் சிலர் வேற்று கிரகமனிதர்கள் தங்களை கடத்த முயன்றபோது ஏற்பட்ட தீக்காயங்கள், பாலியல் உறவுகள், உயிரிழப்பு ஆகியவற்றையும் தெரிவித்துள்ளனர்.
சிலருக்கு குரல் இழப்பு, கண்ணில் காயம், நினைவு இழத்தல், சுவாசப்பிரச்சினை, திடீர் எடைக் குறைவு போன்றவை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர் இந்தஅறிக்கையை அமெரிக்காவைச் சேர்ந்த எம்யுஎப்ஓஎன் என்ற ஆய்வு ஏஜென்சி பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து பெற்று பட்டியலிட்டுள்ளது. வேற்றுகிரகவாசிகள் மனிதர்களை அணுகும்போது ஏற்படும் உயிரியல் சார்ந்த விளைவுகள், அவர்களுடன் நம்முடைய உணர்வுகள் அடையும் அலைவரிசை மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதில் மிகவும் வினோதமாக பட்டப்பகலில் வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்படுதல், வேற்றுக்கிரகவாசிகளால் கர்ப்பமாகுதல், பாலியல் உறவுகள், தொலைவில் உணர்தல் அனுபவங்கள் போன்றவை தொகுக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக வேற்றுகிரவாசிகளுடன் 5 பெண்கள் பாலியல் உறவுகொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் வேற்றுகிரகவாசிகள் வரும் பறக்கும்தட்டைப் பார்த்தபின் காயம் அடைந்தது, கதிர்வீ்ச்சால் காயமடைதல், மூளைக் கோளாறு, நரம்பு பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.