Russia Ukraine War: ஆயிரக்கணக்கான பேர் பலி..? அப்பாவி மக்கள் தஞ்சமடைந்த தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல் ..

Published : Mar 17, 2022, 04:39 PM IST
Russia Ukraine War: ஆயிரக்கணக்கான பேர் பலி..? அப்பாவி மக்கள் தஞ்சமடைந்த தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல் ..

சுருக்கம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை 22 வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்த தியேட்டர் மீது ரஷ்ய  பீரங்கி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு மக்கள் தங்கியுள்ள பகுதியில் நடத்தப்பட்ட  இந்த இராணுவ தாக்குதலுக்கு, உக்ரைன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை 22 வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்த தியேட்டர் மீது ரஷ்ய  பீரங்கி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு மக்கள் தங்கியுள்ள பகுதியில் நடத்தப்பட்ட  இந்த இராணுவ தாக்குதலுக்கு, உக்ரைன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 

உக்ரைன் - ரஷ்யா போர்:

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய தாக்குதல், 20 நாட்களை கடந்து இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும்  போர் நிறுத்தம் தொடர்பாக மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை எட்டியுள்ள நிலையில், பொதுமக்களை குறிவைத்து தாக்குதலை ரஷ்ய படை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு வலுந்து வருகிறது.

தியேட்டர் தாக்குதல்:

இந்நிலையில் மரியுபோல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்த தியேட்டரில் ரஷ்ய படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதுக்குறித்து டானெட்ஸ்க் பிராந்திய ராணுவ நிர்வாகத் தலைவர் பாவ்லோ கிரிலெங்கோ, ரஷ்யர்கள் திட்டமிட்டு உக்ரைன் மக்கள் மீது தாக்குதலை நடத்துகின்ற்னர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் ,"மரியுபோலில் ரஷ்யப் படைகள் இன்னொரு கொடூரத்தை நிகழ்த்தியுள்ளன. ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தஞ்சம் புகுந்திரத்த திரையரங்கை ரஷ்யா தகர்த்துள்ளது. ரஷ்யர்களுக்கு இங்கு மக்கள் தஞ்சமாக தங்கியிருந்தது தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ரஷ்ய போர்க் குற்றவாளிகளைத் தடுத்து நிறுத்துங்கள்" என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

புதின் ஒரு போர்க் குற்றவாளி:

இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "புதின் ஒரு 'போர்க் குற்றவாளி' என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ரஷ்யப் படைகள் உக்ரைனில் மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்துகிறது என்று தெரிவித்த அவர்,  இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க ஆயுதங்களை வழங்கி உக்ரைனுக்கு உதவுவோம் என்று உறுதிப்பட கூறினார். 

7000 ரஷ்ய வீரர் பலி:

இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் 3 வாரங்களாக நடக்கும் இந்த போரில் ரஷ்யத் தரப்பில் 7000 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் உக்ரைன் தரப்போ தாங்கள் இதுவரை 14,000 ரஷ்ய வீரர்களை போரில் வென்றுள்ளதாக தெரிவிக்கிறது. ஆனால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மூன்று வாரங்களில் வெறும் 498 வீரர்கள் மட்டுமே மரணித்துள்ளனர் என்று கூறியுள்ளது. அண்மையில் பிரிட்டன் ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றில் சிரியா போன்ற நாடுகளிடம் படை உதவியைக் ரஷ்யா கோரியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும் படிக்க: உக்ரைனுடனான போரில் 14,000 ரஷ்ய வீரர்கள் பலி... உக்ரைன் ராணுவம் தகவல்!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!