Russia - Ukraine war : எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. போரை நிறுத்துங்கள்..உக்ரைன் உருக்கம்..

By Thanalakshmi V  |  First Published Feb 28, 2022, 6:00 PM IST

Russia - Ukraine war :ரஷ்ய படைகள் உடனே வெளியேற வேண்டும்  என பெலாரஸின் கோமல் நகரில்  நடைபெற்ற பேச்சுவாரத்தையில் உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. மேலும் போர் நிறுத்தத்தை  உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் உக்ரைன் கோரிக்கை வைத்துள்ளது.
 


உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 5 வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய படையினர். குறிப்பாக தலைநகர் கீவ்-யில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. 

இதற்கிடையில், முதன்முறையாக ரஷ்ய தரப்பில், தங்கள் வீரர்கள் பெருமளவில் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதே போல் ரஷ்யப் படைகளின் தாக்குதலால் இதுவரை உக்ரைனின் அப்பாவி பொதுமக்களில் 352 பேர் பலியாகியுள்ளனர்.மேலும், போலந்து, ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு 4 லட்சம் பேர் - பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் இடம்பெயர்ந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதனிடயே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை ரஷ்யா அழைப்பிற்கு உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில், உக்ரைன் குழுவினர் இன்று பெலாரஸ் சென்றனர். ரஷ்யா- உக்ரைன் இடையே இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனால் உக்ரைன் மிதான தாக்குதலை ரஷ்யா குறைந்துள்ளதாக தெரிகிறது. போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது .நேற்றைய இரவு தான் உக்ரைனில் வ்வான்வழித் தாக்குதல் நடத்தப்படவில்லை. 4 நாட்களுக்குப் பின்னர் மக்கள் கொஞ்சம் நிம்மதியுடன் இறுக்கின்றனர். 

பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு உக்ரைன் ஆலோசனைக் குழு இன்று காலை விரைந்தது. அதேபோல் ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவும் தயார் நிலையில் இருந்தது. உள்ளதாகத் தெரிகிறது. படையெடுப்புக்கு முன்னதாக உக்ரைனை ஒட்டிய பெலாரஸ் எல்லையில் ரஷ்யா நிறைய படைகளைக் குவித்து வைத்திருந்தது. அந்த இடத்தில் தற்போது பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்ய படைகள் உடனே வெளியேற வேண்டும்  என பெலாரஸின் கோமல் நகரில்  நடைபெற்ற பேச்சுவாரத்தையில் உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. மேலும் போர் நிறுத்தத்தை  உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் உக்ரைன் கோரிக்கை வைத்துள்ளது.
 

click me!