Russia Ukraine Crisis: குறைந்தது ராணுவ தாக்குதல்.. மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம்..ரஷ்யா திடீர் அறிவிப்பு..

Published : Feb 28, 2022, 03:18 PM IST
Russia Ukraine Crisis: குறைந்தது ராணுவ தாக்குதல்.. மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம்..ரஷ்யா திடீர் அறிவிப்பு..

சுருக்கம்

Russia Ukraine Crisis updates: உக்ரைனில் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

Russia Ukraine Crisis updates: உக்ரைனில் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் கடந்த வியாழக்கிழமை தொடங்கி 5 வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் கீவ் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது ரஷய் ராணுவம்.

மேலும் ரஷ்யா மருத்துவமனைகள், பள்ளிகள், குடியுருப்புகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை தாக்கி வருகின்றனர் என்று உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டி வருகிறார். மேலும் ரஷ்ய படைகள் உக்ரைனில் இனப்படுகொலை செய்து வருகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார். தொடர் ராணுவ தாக்குதலால, உக்ரைன் நாட்டு மக்கள் போலந்து , ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இதனிடயே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை ரஷ்யா அழைப்பிற்கு உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில், உக்ரைன் குழுவினர் இன்று பெலாரஸ் சென்றுள்ளனர். ரஷ்யா- உக்ரைன் இடையே இன்று  பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், உக்ரைன் மிதான தாக்குதலை ரஷ்யா குறைந்துள்ளதாக தெரிகிறது. போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், போர் விமான தாக்கு எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் இருந்து மக்கள் பாதுகாப்பா வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கீவ்-வாசில்கோவ் சாலை வழியாக மக்கள் வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீவில் ஊரடங்கும் விலக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!