Russia - Ukraine war : ரஷ்யாவிற்கு எதிராக போரிட விரும்பும் ராணுவ அனுபவம் கொண்ட கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார். மேலும் போரை நிறுத்தி ரஷ்ய படையினர் தங்கள்உயிரை பாதுகாத்துக்கொண்டு உடனடியாக வெளியேறுங்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் கடந்த வியாழக்கிழமை தொடங்கி 5 வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் கீவ் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது ரஷய் ராணுவம்.
இதனிடயே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை ரஷ்யா அழைப்பிற்கு உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில், உக்ரைன் குழுவினர் இன்று பெலாரஸ் சென்றுள்ளனர். ரஷ்யா- உக்ரைன் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், உக்ரைன் மிதான தாக்குதலை ரஷ்யா குறைந்துள்ளதாக தெரிகிறது. போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
நேற்றைய இரவு வான்வழித் தாக்குதல் இல்லாத இரவாக உக்ரைனுக்கு அமைந்தது. 4 நாட்களுக்குப் பின்னர் மக்கள் கொஞ்சம் நிம்மதியுடன் நித்திரை கொள்ள ஏதுவான ஓர் இரவாக அமைந்தது. பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு உக்ரைன் ஆலோசனைக் குழு விரைந்துள்ளது. அதேபோல் ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது. படையெடுப்புக்கு முன்னதாக உக்ரைனை ஒட்டிய பெலாரஸ் எல்லையில் ரஷ்யா நிறைய படைகளைக் குவித்து வைத்திருந்தது. அந்த இடத்தில் தற்போது பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போர் விமான தாக்கு எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் இருந்து மக்கள் பாதுகாப்பா வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கீவ்-வாசில்கோவ் சாலை வழியாக மக்கள் வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீவில் ஊரடங்கும் விலக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவிற்கு எதிராக போரிட விரும்பும் ராணுவ அனுபவம் கொண்ட கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார். மேலும் போரை நிறுத்தி உங்கள் உயிரை பாதுகாத்துக்கொண்டு உடனடியாக வெளியேறுங்கள் என்று அவர் எச்சரித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், முதன்முறையாக ரஷ்ய தரப்பில், தங்கள் வீரர்கள் பெருமளவில் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை. ஆனால், உக்ரைன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அண்மைத் தகவலில் இதுவரை 5,300 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.