ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த பல வருடங்களாக மோதல் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதிலும் கடந்த 25 வருடங்களில் மோதல் புதிய விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில், தான் தற்போது ரஷ்யா - உக்ரைன் மோதல் என்பது போராக உருவெடுத்து உள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதையடுத்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் குண்டு மழை பொழிய தொடங்கியது. இதனால், அப்பகுதியில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த பல வருடங்களாக மோதல் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதிலும் கடந்த 25 வருடங்களில் மோதல் புதிய விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில், ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் ரஷ்யா தொடங்கியுள்ளது. தலைநகர் கீவ்வில் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது.
ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். போர் தொடுக்க எந்த திட்டமும் இல்லை என ரஷ்யா அதிபர் கூறி வந்த நிலையில் திடீரென தாக்குதல் நடத்த உத்தரவிட்டதையடுத்து முக்கிய நகரங்களில் ரஷ்ய ராணுவ படையினர் குண்டு மழையை பொழிந்து வருகின்றனர்.