உக்ரைனின் கிழக்குப்பகுதி மாநிலங்களுக்கு தன்னாட்சி வழங்கி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தநிலையில், அந்த இரு பகுதிகளிலும் வர்த்தகம், முதலீடு செய்யத் தடைவிதித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பொருளாதாரத் தடை விதித்துள்ளார்.
உக்ரைனின் கிழக்குப்பகுதி மாநிலங்களுக்கு தன்னாட்சி வழங்கி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தநிலையில், அந்த இரு பகுதிகளிலும் வர்த்தகம், முதலீடு செய்யத் தடைவிதித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிதித் தடை விதித்துள்ளார்.
முன்னாள் சோவியத் நாடான உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் படைப்பிரிவான நேட்டோவில் சேரவிருப்பம்கொண்டுள்ளது. ஆனால், உக்ரைன் நேட்டோவில் சேர ரஷ்யா அனுமதிக்கவில்லை. இதனால் உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் படை வீரர்களைத் திரட்டி ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டுவருவதால், உலகளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர உக்ரைன் நாட்டுக்குள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் பிரிவினருக்கும் ரஷ்யா ஆதரவு தெரிவித்து கொம்புசீவிவிட்டுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உக்ரைனின் கிழக்குப்பகுதியில் இருக்கும் டான்பாஸ் மண்டலத்தில் உள்ள டோனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய இரு மாநிலங்களில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் அதிபர் புதினை சமீபத்தில் சந்தித்து தங்கள் மாநிலங்களை சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கக் கோரினர். இதன்படி, டோனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய இரு மாநிலங்களையும் தன்னாட்சி பெற்றதாக சுதந்திரநாடாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேற்று அறிவித்தார்.
ரஷ்யாவுக்கும்-உக்ரைனுக்கும் ஏற்கெனவே போர் பதற்றம் தீவிரமாக இருக்கும் நிலையில் அதிபர் புதினின் இந்த செயல் எரியும் தீயில் எண்ணெய்வார்க்கும் போல் இருந்தது.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. உடனடியாக ஐ.நா. பாதுகாப்பு அவையும் கூடி இது தொடர்பாக விவாதித்தது. இதில் ரஷ்ய அதிபர் புதின், டோனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய இரு மாநிலங்களை சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது கண்டனத்துக்குரியது, உக்ரைனின் இறையான்மையை மீறியது என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்தது.
ரஷ்யஅதிபர் புதினின் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், “ உக்ரைனின் டான்பாஸ் மாகாணத்தில் இருக்கும் டோனட்ஸ்க், லுஹான்ஸ் மாநிலங்களை சுதந்திரம் பெற்றதாக ரஷ்யா அறிவித்தது முற்றிலும் கண்டிக்கத்தக்கது அப்பட்டமான விதிமுறை மீறல்” எனத் தெரிவித்தது
இந்நிலையில் உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இருக்கும் டோனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகியபகுதிகளை சுதந்திரம் பெற்றதாக ரஷ்யா அறிவித்த நிலையில் அந்த இரு பகுதிகளுக்கும் நிதித் தடையை அமெரிக்கா விதித்துள்ளது
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் பென் சைகி கூறுகையில் “சுதந்திரம் பெற்றதாக ரஷ்யா அறிவித்த உக்ரைனின் டோனட்ஸ்க், லுஹான்ஸ் மாகாணங்களுக்கு எதிராக நிதி, பொருளதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. இந்த மாநிலங்களில் முதலீடு செய்தல், வர்த்தகம் செய்தல், நிதியுதவி அளித்தல் போன்ற நடவடிக்கைக்கு தடை விதித்து அதிபர் பிடன் கையொப்பமிட்டுள்ளார். ஆதலால் இந்த இரு மாநிலங்களுக்கு எதிராக பொருளதார நிதி தடைவிதி்க்கப்பட்டுள்ளது. ரஷ்யா, மின்ஸ்க் ஒப்பந்தத்தைமதித்து நடக்க வேண்டும். இல்லாவிட்டால் உக்ரைனின் அமைதி, நிலைத்தன்மை,இறையாண்மை, எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுதலாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.