அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட 36 நாடுகளின் விமானங்களுக்கு தடை... பழிக்கு பழி வாங்கும் ரஷ்யா!!

By Narendran SFirst Published Feb 28, 2022, 10:10 PM IST
Highlights

ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 36 நாடுகளின் விமானங்களுக்கு ரஷ்யா தடை விதித்து ரஷ்யா பதில் நடவடிக்கை எடுத்துள்ளது. 

ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 36 நாடுகளின் விமானங்களுக்கு ரஷ்யா தடை விதித்து ரஷ்யா பதில் நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 5வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனிடையே பல நாடுகள் தங்கள் வான்வழியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்தது.

இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 36 நாடுகளின் விமானங்களுக்கு ரஷ்யா தடை விதித்தது. ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அந்நாடுகள் மீது ரஷ்யா பதில் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. எனினும், பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில், அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று ரஷ்யா விடுத்த அழைப்பை முதலில் நிராகரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,அதை இன்று ஏற்பதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று மதியம் இருநாடுகளுக்கும் இடைய பேச்சுவார்த்தை நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், உடனடியாக போர் நிறுத்த வேண்டும், அதேபோல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தியிருந்தது. ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து, ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 36 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அந்நாடுகளுக்கு மீது ரஷ்யா பதில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

click me!