Ukraine-Russia War: மிரட்டும் புதின்..சீறும் ஜோ பைடன்.. ரஷ்யாவிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு..

By Thanalakshmi V  |  First Published Feb 28, 2022, 9:36 PM IST

Ukraine-Russia War: ரஷ்யாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.பெலாரஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தற்காலிகமாக மூடவும் உத்தரவிட்டுள்ளது.


பெலாரஸ் நாட்டில் உக்ரைன் - ரஷ்யா தரப்பினரிடையே போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.  அதில், இதுவரை நடந்துள்ள போரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதால் போர் நிறுத்தமே தேவை என்றும் ரஷ்யப்படைகள் வெளியேற வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.அதேசமயம் இருநாடுகளிடையே ஒப்பந்தம் செய்வது அவசியம் எனவும், அதற்கு உக்ரைன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ரஷ்யா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது, ஐரோப்பிய யூனியனை காரணம் காட்டி ரஷ்ய எல்லையில் ஐரோப்பிய நெருங்கி வருவதை ஏற்க முடியாது எனவும், இதற்கு உக்ரைன் காரணமாக இருக்கக்கூடாது எனவும் ரஷ்யா உறுதியாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், நிதியுதவி தரப்படும் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பு இந்த முடிவிற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு நேட்டோ ஆயுதங்கள், நிதியுதவி வழங்குவதன் மூலம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இதனிடையே அணு ஆயுத மும்முனை படைகள் தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. , தரைவழி, நீர்மூழ்கி கப்பல் வழி மற்றும் விமானங்கள் வழி என அணு ஆயுத மும்முனை படைகள் தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

அதுபோலவே ஐரோப்பிய யூனியனில் தங்களை இணைக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளதால் பேச்சுவார்த்தை மூலம் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்வியெழுந்துள்ளது. இதனிடையே பெலாரஸ், மின்ஸ்க் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செயல்பாடுகளை அமெரிக்க வெளியுறவுத்துறை முடக்கி வைத்துள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள அவசரநிலை அல்லாத ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை தானாக முன்வந்து வெளியேறுமாறும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.ரஷ்யாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.பெலாரஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தற்காலிகமாக மூடவும் உத்தரவிட்டுள்ளது.

click me!