உக்ரைன் தலைநகர் கிவ் நகரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது ஏராளமான ஏவுகணைகளை ஏவி ரஷ்யா திடீரென தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஜூன் மாதத்துக்குப்பின் ரஷ்யா நடத்தும் முதல் தாக்குதலாகும்.
உக்ரைன் தலைநகர் கிவ் நகரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது 75 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா திடீரென தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதத்துக்குப்பின் ரஷ்யா நடத்தும் முதல் தாக்குதலாகும்.
கிரிமியா மற்றும் ரஷ்யா இடையிலான பாலம் நேற்று வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின், உக்ரைன் மீது இன்று ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
உலகை ஆச்சரியப்படுத்தும் பிங்க் நிற வைரக்கல்.. ரூ.480 கோடிக்கு விற்பனையாகி உலக சாதனை..
உக்ரைன் நாடு, ஐரோப்பிய யூனியனில் சேர முடிவெடுத்த நிலையில் அதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது. ஒருகாலத்தில் ஒருங்கணைந்த சோவியத் யூனியனில் உக்ரைன் அங்கமாக இருந்தது. இதனால் நேட்டோ அமைப்பிலும், ஐரோப்பிய யூனியனிலும் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
இதையடுத்த, கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இரு நாடுகளும் கடந்த ஜூன் மாதம்வரை கடுமையாக போரிட்டனர். இதில் இரு தரப்பு நாடுகளுக்கும் உயிர்சேதங்கள், பொருட் சேதங்கள், இழப்புகள் ஏற்பட்டன.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்துக்குப்பின் உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் குறைந்திருந்தநிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த வாரம், உக்ரைன் நகரங்களை ரஷ்யா இணைத்துக்கொண்டதாக, அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார். புதின் அறிவித்த சில மணிநேரத்தில் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு உக்ரைன் விண்ணப்பம் அளித்தது.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு நகரங்களில் இன்று அதிகாலை முதல் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுவரை ரஷ்யா 75 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியுள்ளதாகவும் இதில் 45 ஏவுகணைகளை உக்ரைன் இடைமறித்து தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவர் கெய்ரலோ டைமெஸ்கென்கோ ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இந்த தாக்குதலில் நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
லிப்டில் மாட்டிக்கொண்ட11 வயது சிறுவன்… அடுத்து நிகழ்ந்தது என்ன? வீடியோ வைரல்!!
கிவ் நகரில் இன்று காலை 8.15 மணிக்கு ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தியது. கிவ் நகரில் காலை நேரத்தில் மட்டும் 5 வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கிரிமியா மற்றும் ரஷ்யா இடையிலான பாலம் நேற்றுமுன்தினம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின், உக்ரைன் மீது இன்று ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை உக்ரைன் பொறுப்பேற்கவில்லை.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறுகையில் “ உக்ரைன் அரசின் ரகசிய அமைப்பு மூலம்தான், கிரிமியா-ரஷ்யா இடையிலான பாலம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இதை தீவிரவாதத்தாக்குதல் என்று நினைக்கிறோம்” என தெரிவித்தார்.