வேலை மோசடி: மியான்மர், கம்போடியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு எச்சரிக்கை

By Pothy Raj  |  First Published Oct 8, 2022, 3:36 PM IST

வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்ட்ட இந்தியர்களில் 100க்கும் மேற்பட்டோர் மியான்மர் மற்றும் கம்போடியாவில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளது. 


வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்ட்ட இந்தியர்களில் 100க்கும் மேற்பட்டோர் மியான்மர் மற்றும் கம்போடியாவில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளது. 

போலியான வேலைவாய்ப்புஅறிவிப்புகளை நம்பி ஏமாந்தால் மீட்பது கடினம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest Videos

undefined

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர்  அரிந்தம் பக்சி இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

2023ம் ஆண்டிலிருந்து விமானப் படையில் ‘மகளிர் அக்னீவர்கள்’:ஏர் சீப் மார்ஷல் சவுத்ரி அறிவி

இதுவரை மியான்மரில் இருந்து 50க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுள்ளோம். இவர்கள் அனைவரும் போலிவேலைவாய்ப்பு அறிவிப்பில் சிக்கியிருந்தனர். இன்னும் சிக்கியிருக்கும் இந்தியர்களையும் மீட்க முயன்று வருகிறோம். எத்தனை பேர் மியான்மரில் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அந்நாட்டில் உள்ள இந்தியர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். 

மியான்மர் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துவிட்டதாகக் கூறி ஏராளமான இந்தியர்களை மியான்மர் போலீஸார் பிடித்து வைத்திருந்தார்கள், அவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். வேலைமோசடியில் சிக்கி, கம்போடியா, லாவோஸில் இருக்கும் இந்தியர்களை மீட்க வியட்நாம், நோம் பே, வாங்காக்ஆகிய இடங்களில் இருக்கும் தூதரகங்களில் பேசி வருகிறோம். 

பிரதமர் மோடி நாளை முதல் 3 நாட்கள் குஜராத் பயணம்: நாட்டின் முதல் சோலார் கிராமத்தை அறிவிக்கிறார்

ஏற்கெனவே நாங்கள் ஆலோசனைகள் வழங்கியிருக்கிறோம். நாம் பென் நகரில் இருக்கும் இந்தியத் தூதரகமும் அறிவுரைகள் வழங்கியுளளது. நாங்கள் மீண்டும் அறிவுறுத்துவது என்னவென்றால், சந்தேகத்துக்குரிய வேலைவாய்ப்பை ஏற்கும்போது எச்சரிக்கையாக இருங்கள், ஒருவேளை நீங்கள் எங்காவது சிக்கிவிட்டால் உங்களை பாதுகாப்பாக மீட்பது சிக்கலாகிவிடும்.இது எச்சரிக்கைச் செய்தி.

கம்போடியாவில் இருந்து இதுவரை 80 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 32 இந்தியர்கள் மியான்மர்,தாய்லாந்தில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் 13 பேர் தமிழர்கள் அவர்களும் தமிழகம் சென்றடைந்தனர். 

வேலை மோசடியில் சிக்கி ஏராளமான இந்தியர்கள் மியான்மரில் இன்னும் உள்ளனர், அவர்களை மீட்க பேசி வருகிறோம். அவர்களை அழைத்துவர சட்டப்பூர்வ பணிகள் மியான்மர் அரசுடன் நடந்து வருகிறது. வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட ஏஜென்டுகள் குறித்த விவரங்களை பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசு, போலீஸாரிடம் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆரிந்தம் பக்சி தெரிவித்தார்

நெட் தேர்வின் ”Exam City Information Slip” வெளியானது.. தெரிந்துக் கொள்ள வேண்டியவை..

செப்டம்பர் மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட எச்சரிக்கையில், “ இந்திய ஐடி துறை இளைஞர்கள் அதிகமாக குறிவைக்கப்படுகிறார்கள். அவர்கள் வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம், போலி அறிவிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.

பாங்காக் மற்றும் மியான்மரில் போலியாக நடத்தப்படும் ஐ.டி. நிறுவனங்கள் டிஜிட்டல் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் என்ற பெயரில் இந்தியர்களை வேலைக்கு எடுத்து மோசடி செய்கின்றன. இந்த மோசடி கும்பல் ஐ.டி படித்த இளைஞர்களைத்தான் குறிவைக்கிறது” என எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


 

click me!