உலகை ஆச்சரியப்படுத்தும் பிங்க் நிற வைரக்கல்.. ரூ.480 கோடிக்கு விற்பனையாகி உலக சாதனை..

By Thanalakshmi VFirst Published Oct 8, 2022, 4:53 PM IST
Highlights

சீனாவில் பிங்க் நிற வைரக்கல் 49 மில்லியனுக்கு டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகி, உலக சாதனை படைத்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.480 கோடி ஆகும். 
 

பிங்க் நிற வைரமானது அரிதான மற்றும் விலை மதிப்பற்றது. வரலாற்றில் இதுவரை கிடைக்கப்பெற்ற வைரங்களிலே மிகவும் விலை உயர்ந்தது பிங்க் நிற வைரம். 

ஹாங்காங்கில் சோதேபி ஏல நிறுவனம் 11.15 கரட் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரத்தை 49.9 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது. இதன் உண்மையான மதிப்பு 21 மில்லியன் டாலர் தான். ஆனால் ஏலம் விடப்பட்டத்தில் ரூ. 49.9 மில்லியனுக்கு டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:இந்தியாவுக்கு பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் இருங்கள்... குடிமக்களுக்கு அலர்ட் கொடுத்த அமெரிக்கா!!

முன்னதாக முதல் முறையாக 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபேத்திற்கு  23.60 கரட் வில்லியம்சன் பிங்க் நிற வைரம் திருமண பரிசாக கொடுக்கப்பட்டது. அதனையடுத்து 2017 ஆம் ஆண்டு ஹாங்காங் ஏலத்தில் 59.60 கரட் பிங்க் நிற வைரம் 71.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி, சாதனை படைத்தது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.519 கோடி ஆகும். 

இதுவரை விற்கப்பட்ட வைரங்களில் இதுவே மிகவும் விலை உயர்ந்தது ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது 11.15 கரட் பிங்க் நிற வைரக்கல் 49.9 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏலத்தில் அதிக மதிப்பில் விற்பனையான வைரங்களில் இது இரண்டாவது இடத்தை பிடித்து உலக சாதனை படைத்துள்ளது. 


மேலும் படிக்க:வேலை மோசடி: மியான்மர், கம்போடியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு எச்சரிக்கை

click me!