ரிஷி சுனக்கிற்கு கடும் போட்டியாளராக உள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டவுட்ன் 83 வாக்குகளும், வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் 64 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
கடந்த 7ம் தேதி போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறை இங்கிலாந்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான ரேசில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்றில் ரிஷிக் சுனக் எதிர்பார்த்தது போலவே முன்னிலை வகித்த நிலையில், 2-வது சுற்றிலும் 101 வாக்குகள் பெற்று ரிஷி சுனக் முதலிடம் பிடித்துள்ளார்.
undefined
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சிசிடிவி வீடியோ உண்மை இல்லை.! இதுலயும் லேட்டா ? காவல்துறையை வறுத்தெடுக்கும் மக்கள்
ரிஷி சுனக்கிற்கு கடும் போட்டியாளராக உள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டவுட்ன் 83 வாக்குகளும், வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் 64 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.இதனால் போட்டிக்களம் அனல் பறக்கிறது. இந்நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் சுற்றில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் தேர்வுக்கான போட்டியில் இன்னும் நான்கு பேர் மட்டுமே உள்ளதால் ரிஷிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்
தற்போது நடந்த மூன்றாம் சுற்றில் ரிஷிக்கு 115 வாக்குகள் கிடைத்தன. அவரைத் தொடர்ந்து வர்த்த அமைச்சர் பென்னி மோர்டண்ட் 82 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். வெளியுறவு செயலாலர் லிஸ் ட்ரஸ் 71 வாக்குகள் பெற்றும் மூன்றாம் இடம் பிடித்தார். முன்னாள் சமத்துவத் துறை அமைச்சர் கெமி 58 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். எனவே அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?