பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஆவாரா ? என்று கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். சொந்த கட்சியினர் மத்தியிலேயே போரிஸ் ஜான்சனுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், கடந்த 7-ந் தேதி போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறை இங்கிலாந்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கான ரேசில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்றில் ரிஷிக் சுனக் எதிர்பார்த்தது போலவே முன்னிலை வகித்த நிலையில், 2-வது சுற்றிலும் 101 வாக்குகள் பெற்று ரிஷி சுனக் முதலிடம் பிடித்துள்ளார். ரிஷி சுனக்கிற்கு கடும் போட்டியாளராக உள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டவுட்ன் 83 வாக்குகளும், வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் 64 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சிசிடிவி வீடியோ உண்மை இல்லை.! இதுலயும் லேட்டா ? காவல்துறையை வறுத்தெடுக்கும் மக்கள்
இதனால் போட்டிக்களம் அனல் பறக்கிறது. யார் இந்த ரிஷி சுனக் ? 42 வயதான ரிஷி சுனக் அந்நாட்டின் டோரி என்ற பகுதியில் தற்போது எம்பியாக உள்ளார். இவர் பிரிட்டன் நாட்டின் சவுத் ஹாம்ப்டன் பகுதியில் பிறந்தவர். இவரின் தாத்தா பாட்டி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.1960களில் பிரிட்டன் நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார் ரிஷி சுனக்.
ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தார். உலகின் முன்னணி நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ்சில் முன்னணி பொறுப்புகளை வகித்த ரிஷி, முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு..எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்
இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 2015ம் ஆண்டில் தீவிர அரசியல் களத்தில் குதித்த ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ரிச்மன்ட் பகுதியின் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு தேர்தலில் போரிஸ் ஜான்சன் பிரதமராக ஆதரவு அளித்து பரப்புரை செய்தார் ரிஷி. தேர்தலில் வென்று போரிஸ் ஜான்சன் பிரதமரான நிலையில், ரிஷி சுனக்கிற்கு நிதித்துறை தலைமை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பிறகு 2020ஆம் ஆண்டில் பிரதமர், துணை பிரதமர் ஆகியோருக்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் அமைச்சரவை பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.
கோவிட் காலத்தில் ரிஷி சுனக் நிதித்துறையில் செய்த நடவடிக்கைகள் அவருக்கு பாராட்டுகளை தந்துள்ளது. அதே சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியது. குறுகிய காலத்திலேயே அரசியலில் இவர் பெரும் வளர்ச்சி பெற்றதற்கும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் புதிய பிரதமர் தேர்வாகும் நிலையில், பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ஆவாரா ? என்று கேள்வி எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?