அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு

By SG Balan  |  First Published Jan 7, 2023, 3:25 PM IST

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி சபாநாயகராகத் தேர்வாகியுள்ளார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வலதுசாரி உறுப்பினர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததனர். சென்ற நான்கு நாட்களில் 14 முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டும் சபாநாயகரைத் தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்தது.

Latest Videos

undefined

சனிக்கிழமை நடந்த 15வது சுற்று வாக்குப்பதிவில் கெவின் மெக்கார்த்தி வெற்றி பெற்றார். 160 ஆண்டு அமெரிக்க வரலாற்றில் நாடாளுமன்ற சபாநாயகரைத் தேர்வு செய்ய 12 சுற்றுகளுக்கு மேல் இழுபறி நீடித்தது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

H1-B விசா கட்டணத்தை 332 சதவீதம்வரை உயர்த்துகிறது அமெரிக்கா! எவ்வளவு உயர வாய்ப்பு?

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை 435. இதில் குறைந்தது 218 பேரின் ஆதரவு இருந்தால்தான் வெற்றி பெறமுடியும். ஆனால், வாக்குப்பதிவில் 430 பேர்தான் கலந்துகொண்டனர். இதனால், 216 வாக்குகளை ஈட்டிய கெவின் மெக்கார்த்தி வெற்றி அடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹகீம் ஜெப்ரீஸ் 212 வாக்குகள் பெற்றார்.

புதிய சபாநாயகர் ஆகியிருக்கும் 57 வயதான கெவின் மெக்கார்த்தி கலிபோர்னியாவைச் சேர்ந்தவர். அடுத்த 4 ஆண்டுகளுக்கு இவர் சபாநாயகர் பதவியில் இருப்பார். இவருக்கு முன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி சபாநாயகராக இருந்தார். இப்போது குடியரசுக் கட்சி சபாநாயகர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர், துணை அதிபர் பதவிகளுக்குப் பிறகு அதிக அதிகார பலம் உள்ளது நாடாளுமன்ற சபாநாயகர் பதவிதான் என்பது கவனிக்கவேண்டியதாகும்.

11 நாட்கள்.. 13,560 கிமீ தூரம்.. உணவின்றி பறந்து கின்னஸ் சாதனை செய்த பறவை - எங்கு தெரியுமா?

click me!