இரண்டே நாளில் சாகடிக்கும் அரிய வகை சதை உண்ணும் பாக்டீரியா! ஜப்பானில் பரவுவதாகத் தகவல்!

By SG Balan  |  First Published Jun 15, 2024, 7:59 PM IST

"ஒரு நோயாளி காலையில் பாதத்தில் வீக்கத்துடன் வந்தால், அது மதியம் முழங்கால் வரை விரிவடையும். 48 மணிநேரத்திற்குள் அவர் இறந்துவிடக்கூடும்" என்று கென் கிகுச்சி குறிப்பிடுகிறார்.


ஜப்பானில் கோவிட் காலக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பின்னர், 48 மணிநேரத்திற்குள் மக்களைக் கொல்லக்கூடிய அரிய சதை உண்ணும் பாக்டீரியா மூலம் ஏற்படும் நோய் பரவிவருகிறது.

ஜூன் 2ஆம் தேதியில் இருந்து நிலவரப்படி, குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளானவர்லள் எண்ணிக்கை 977 ஐ எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 941 ஆக பதிவாகி இருந்தது என 1999 இந்த முதல் நோயைக் கண்காணித்துவரும் அந்நாட்டு தேசிய தொற்று நோய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

குரூப் A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (GAS) குழந்தைகளில் தொண்டையில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. பொதுவாக இந்தப் பாதிப்பு "ஸ்ட்ரெப் த்ரோட்" என்று அழைக்கப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம், காய்ச்சல், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். சுவாசப் பிரச்சனைகள், உறுப்பு செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு  கூட நேரிடலாம்.

இன்னும் பழைய சிம் கார்டு தான் யூஸ் பண்றீங்களா? மொபைல் நம்பரை தக்கவைக்க கட்டணம் செலுத்தணுமாம்!

50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் இந்த நோயால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்த்தொற்றினால் இறப்பவர்கள் பெரும்பாலும் 48 மணிநேரத்திற்குள் இறக்கின்றனர் என்று டோக்கியோ மகளிர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்கள் பேராசிரியரான கென் கிகுச்சி சொல்கிறார். மக்கள் கைகளின் சுகாதாரத்தை பராமரிக்கவும், இரத்தக் காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் பேராசிரியர் கென் கிகுச்சி வலியுறுத்துகிறார்.

"ஒரு நோயாளி காலையில் பாதத்தில் வீக்கத்துடன் வந்தால், அது மதியம் முழங்கால் வரை விரிவடையும். 48 மணிநேரத்திற்குள் அவர் இறந்துவிடக்கூடும்" என்று அவர் குறிப்பிடுகிறார். தற்போதைய நிலையில், ஜப்பானில் இந்த ஆண்டு இந்த நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2,500 ஐ எட்டக்கூடும் என்றும் இறப்பு விகிதம் 30% ஆக இருக்கலாம் என்றும் கென் கிகுச்சி கவலை தெரிவிக்கிறார்.

இந்தத் தொற்று சமீபத்திய ஜப்பான் தவிர மற்ற நாடுகளிலும் பரவியுள்ளது. 2022 இன் பிற்பகுதியில், குறைந்தது ஐந்து ஐரோப்பிய நாடுகள் உலக சுகாதார நிறுவனத்திடம் குரூப் A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (GAS) நோய்த்தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்தன. கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த நோய்த்தொற்று அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடும்பத்தோட ஜாலியாக பயணிக்கலாம்! கம்மி பட்ஜெட்டில் விசாலமான 7 சீட்டர் ரெலானால்ட் ட்ரைபர் கார்!

click me!