எல்லையில் ஊடுருவ ஐஎஸ்ஐஎஸ் திட்டம்...!! இரத்த வெறியில் பாக் இராணுவம்...!! நாட்டை நாசம் செய்ய பயங்கர சதி...!!

By Asianet TamilFirst Published Sep 5, 2019, 5:29 PM IST
Highlights

ஜம்மு-காஷ்மீர்  கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டம் வைத்துள்ளதாகவும் புலனாய்வு மற்றும் உளவுப் பிரிவு தகவல்கள்  தெரிவிக்கின்றன. எல்லை கட்டுபாட்டு பாதையில் பயிற்ச்சி முகாம்களுடன் கூடிய ஏவுதளங்களும் செயல்பட்டுவருவதை இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளது

ஐஎஸ்ஐஎஸ்  குழுக்களுடன் கைகோர்த்து இந்திய எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் இராணுவம் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

காஷ்மீரல் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு சதிவேலைகளில்  ஈடுபட்டு வருகிறது , குறிப்பாக சர்வதேச நாடுகளை  இந்தியாவிற்கு எதிராக  அணி திரட்டும் முயற்ச்சியில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான், தற்போது இந்தியாவின் மீது மறைமுக தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும்  தீவிரவாத இயக்கங்களை இந்தியாவிற்குள் ஊடுருவ பாக் ராணுவம் முயற்ச்சித்துவரும் அதே வேலையில், சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்வுடன் கைகோர்த்து எல்லையில் தாக்குதல் நடத்த  பாகிஸ்தான் தீவிரம் காட்டிவருகிறது என  இந்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.  

காஷ்மீரில்  தீவிரவாதிகளை ஊடுருவச்செய்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி  கலவரத்தை தூண்டும் வகையில் பல்வேறு சதிவேலைகளை அரங்கேற்ற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. இந்திய புலனாய்வு அமைப்புகளின் மதிப்பீட்டு அறிக்கையின்படி அதிக பயிற்ச்சி பெற்ற பயங்கரவாதிகளை நாட்டிற்குள் இறக்க ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் பாகிஸ்தான் இராணுவமும், இணைந்து  பாக்- ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிதாக 3 தீவிரவாத பயிற்ச்சி முகாம்களை அமைத்துள்ளன. பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குறைந்தது 18க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்கள் மற்றும்  ஏவுதளங்கள் இயங்கி வருவதை  இந்திய புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன. 

அங்கு பயங்கரவாதிகள் பயிற்ச்சி பெற்று ஜம்மு-காஷ்மீர்  கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டம் வைத்துள்ளதாகவும் புலனாய்வு மற்றும் உளவுப் பிரிவு தகவல்கள்  தெரிவிக்கின்றன. எல்லை கட்டுபாட்டு பாதையில் பயிற்ச்சி முகாம்களுடன் கூடிய ஏவுதளங்களும் செயல்பட்டுவருவதை இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளது குறிப்பிட தக்கது. 

click me!