இந்தியாவை மிஞ்சிய பிரிட்டன் ! ஆளுங்கட்சி எம்.பி. கட்சி மாறியதால் பதவி இழக்கிறார் இங்கிலாந்து பிரதமர் !

Published : Sep 03, 2019, 11:39 PM IST
இந்தியாவை மிஞ்சிய பிரிட்டன் ! ஆளுங்கட்சி எம்.பி. கட்சி மாறியதால் பதவி இழக்கிறார் இங்கிலாந்து பிரதமர் !

சுருக்கம்

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி திடீரென கட்சி திடீரென லிபரல் கட்சி மாறியதால் அந்நாட்டின்  புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதையடுத்து பதவி விலகுவார் என எதிர்பாக்கப்படுகிறது

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் மசோதாவை தாக்கல் செய்து, பார்லி.,யில் ஒப்புதல் பெற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பலமுறை ஓட்டெடுப்பு நடந்த போதும், அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு தோல்வியடைந்ததால், அவர் கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான  போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் புதிய பிரதமராக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் எந்த சூழ்நிலையிலும் அக்டோபர் 31ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என்று அறிவித்து இருந்தார்.

இதற்காக பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்தில் அவர் இருந்தார். இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க நிலை பிரிட்டனுக்கு உள்ளது.

ஆனால் பிரெக்ஸிட் ஒப்பந்ததை நிறைவேற்ற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி பிலிப் லீ, லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியில் இணைந்தார். 

இதனால், நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்துள்ளார்.. இதனால் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தாய்-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை உடைப்பு.. இந்தியா கடும் கண்டனம்..!
உலகம் அழியப்போகுது.. கானா சாமியார் கட்டும் நோவா பேழையில் தஞ்சம் புகும் மக்கள்!