மனிதனை நெருக்கும் மலைப்பாம்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

By Narendran S  |  First Published Nov 8, 2022, 5:06 PM IST

அமெரிக்காவில் 20 அடி நீள மலைபாம்பு ஒன்று மனிதரை நசுக்கும் வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.


அமெரிக்காவில் 20 அடி நீள மலைபாம்பு ஒன்று மனிதரை நசுக்கும் வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது. மலைப்பாம்புகள் விஷமற்ற பாம்புகளாக இருந்தாலும், அவை பெரிய அளவில் இருப்பதால் மனிதர்களை விழுங்கும். இரையை சுற்றி வளைத்து நசுக்கி கொல்லும். குறிப்பாக மனிதர்களை சுற்றி வளைத்து மூச்சுத்திணறல் ஏற்பட வைத்து கொல்லும். பாம்புகளில் நீளமாக வளர்வது மலை பாம்பு வகைகளே.

இதையும் படிங்க: ஒரு நாள் இரவில் வங்கிக் கணக்கில் ரூ. 10 கோடி; அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரி!!

Tap to resize

Latest Videos

அதிலும் ரெட்டிகுலேட்டட் வகை மலைப்பாம்புகள் உலகின் நீளமான பாம்புகள் என்று கூறப்படுகிறது. அவை 20 அடிக்கும் மேல் நீளம் வரை வளரக்கூடியவை. இதை கண்டு அஞ்சாவதரே இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் ஒருவர் மிகப்பெரிய மலைப்பாம்புடன் சாதரனமாக விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கச்சா எண்ணெய் திருட்டு! 8 இலங்கை மாலுமிகள் அடங்கிய கப்பலை சிறைபிடித்த நைஜீரியா

அந்த வீடியோவில், லூசி எனப்படும் 20 அடி நீளமுள்ள பெண் மஞ்சள் நிற ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு ஒரு மனிதனின் முழு உடலையும் சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். மேலும் அதை கூண்டுக்குள் போடும் போது அந்த பாம்பு அவரை பலமாக அழுத்துவதையும் காணலாம். இந்த வீடியோ பார்ப்பவரை அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ 7.39 லட்சம் பார்வைகளையும் 20 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

click me!