கச்சா எண்ணெய் திருட்டு! 8 இலங்கை மாலுமிகள் அடங்கிய கப்பலை சிறைபிடித்த நைஜீரியா

By Pothy RajFirst Published Nov 7, 2022, 12:45 PM IST
Highlights

கச்சா எண்ணெய் திருடுபோனது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 8 மாலுமிகள் அடங்கிய கப்பலை நைஜீரியா கடற்படையினர் பிடித்துள்ளனர். 

கச்சா எண்ணெய் திருடுபோனது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 8 மாலுமிகள் அடங்கிய கப்பலை நைஜீரியா கடற்படையினர் பிடித்துள்ளனர். 

ஹூரோயிக் ஐடன் எனும் எண்ணெய் கப்பலில் இலங்கையைச் சேர்ந்த 8 மாலுமிகளும் பணியாற்றி வருகிறார்கள்.

60 நாட்கள் கெடு!அமெரிக்காவில் ட்விட்டர் பணியிலிருந்து நீக்கப்பட்ட இந்தியர்களுக்குச் சிக்கல்

நைஜீரிய கடற்படை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ எம்.வி. ஹீரோயிக் ஐடன் கப்பலில் செயல்பாடுகள் குறித்துவிசாரித்தோம். அதில் நைஜீரியாவில் இருந்து கச்சா எண்ணெயை திருடிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, கினியா கடற்பகுதியில்அந்த கப்பலை மறித்து அதில் உள்ளவர்களை கைது செய்துள்ளோம்.

நைஜீரியாவின் ஏகேபிஓ எண்ணெய் பகுதியிலிருந்து கச்சா எண்ணெயைத் திருடி, இந்தக் கப்பல்தப்பியது. இந்த கப்பலையும், அதில் உள்ளவர்களையும் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி கைது செய்தோம். இந்த கப்பலை நைஜீரியாவுக்கு கொண்டு விசாரணை நடத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

ட்விட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கின் மெட்டா நிறுவனமும் ‘மெகா ஆட்குறைப்பில்’ இறங்குகிறது

இது குறித்து நைஜீரியா கடற்படையின் செய்தித்தொடர்பாளர் அடிடோடன் ஓயோ வான் கூறுகையில் “ ஹீரோயிக் ஐடன் கப்பலை நைஜீரியாவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த விசாரணை முடிந்தபின், அட்டர்னி ஜெனரல் கப்பலையும், அதில் உள்ளவர்களையும் அரசிடம் ஒப்படைப்பது குறித்து முடிவு எடுப்பார்.

ஒருவேளை கச்சா எண்ணெயை திருடியது உண்மையென்றால், அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும். கினியா கடற்பகுதியிலிருந்து நைஜீரியாவுக்கு கப்பல் கொண்டுவரப்பட்டு வருகிறது. அங்கு விசாரணை நடக்கும்” எனத் தெரிவித்தார்

ரஷ்யாவில் துப்பாக்கியில் இருந்து வெளியான நெருப்பினால் பற்றி எறிந்த ஓட்டல்; 15பேர்உயிரிழப்பு!!

நைஜீரியா தேசிய  பெட்ரோலிய நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 70 கோடி டாலர் இழப்பைச் சந்தித்தது. ஒவ்வொரு மாதமும் கச்சா எண்ணெய் திருட்டு மற்றும் எல்லை மீறி வருதலால் ஏராளமான கோடி டாலர் இழப்பு ஏற்படுகிறது என்று நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெய் திருட்டு மற்றும் பைப்களை திருடிச் செல்வதால், போனி எண்ணெய் ஏற்றுமதி பகுதியில் முழுவதுமாக இயக்க முடியாத சூழல் இருக்கிறது என்று நைஜீரியா தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் கச்சா எண்ணெய் திருடியதாக 210பேரை நைஜீரியா கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!