அமெரிக்காவில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
60 நாட்களுக்குள் புதிய வேலை தேடிக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அமெரிக்காவில் இருந்து ட்விட்டரில் வேலையிலிருந்து நீக்கப்பட்ட இந்தியர்கள் வெளியேற வேண்டிய நிர்பந்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
தவறு நடந்துவிட்டது! பணிநீக்கம் செய்யப்பட்ட பலரையும் மீண்டும் அழைக்கிறது ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனத்தை 40 ஆயிரம் கோடி டாலருக்கு எலான் மஸ்க் வாங்கிபின், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அதிரடியா நடவடிக்கை எடுத்து, 3,700 ஊழியர்களை பணி நீக்கி உத்தரவிட்டார்.
ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியர்களில் பெரும்பகுதியினர் ஹெச்1பி விசாவிலும், எல்1பி விசாவிலும் வேலை செய்து வந்தனர். இப்போது இவர்களுக்கு வேலைபறிக்கப்பட்டதையடுத்து, 60 நாட்களுக்குள் அடுத்த வேலை தேடி அதில் சேர வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ட்விட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கின் மெட்டா நிறுவனமும் ‘மெகா ஆட்குறைப்பில்’ இறங்குகிறது
ஒருவேளை 60 நாட்களுக்குள் வேலைகிடைக்காவிட்டால், ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்ட ஹெச்1, எல்1 விசாவில் பணியாற்றிய இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும்.
ட்விட்டர் நிறுவனத்தில் 650 முதல் 670 ஊழியர்கள் வரை ஹெச்1பி விசாவில் பணியாற்றி வந்தனர். ட்விட்டர் நிறுவனத்தின் மொத்தமுள்ள 7800 ஊழியர்களில் 8% பேர் ஹெச்1பி விசாவில் பணியாற்றினர் என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ட்விட்டரில் 50 சதவீதம் ஊழியர்கள் பணிநீக்கப்பட்டதில் எத்தனை பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இதுவரை தெளிவாக இல்லை.
லாகுவெஸ்ட் நிறுவனத்தின் மேலாளர் பூர்வி சோதானி கூறுகையில் “ ஹெச்1 பி விசாவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 60 நாட்கவரை அவகாசம் இருக்கிறது. இவர்களுக்கு வேலை பறிபோனாலும் 60 நாட்களில் வேலை தேடிக்கொள்ளலாம். ஆனால், எல்1 மற்றும்ஓ-1 விசாவில் பணியாற்றியவர்கள் நிலைமைதான் மோசம். தாங்கள் பணியாற்றிய நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியவுடன் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டும்.
ஹெச்1 பி விசா வைத்திருப்பவர்களுக்கும் வேலைகாலியாகிவிட்டால் முழுமையாக 60 நாட்கள் அவகாசம் கிடைக்கும் என்று கூறிவிட முடியாது. அது அவர்களின் விசா காலத்தைப் பொறுத்து அமையும். ஒருவேளை அவர்களின் விசா காலமே 60 நாட்களுக்குள்தான் இருந்தால், அவர்களுக்கு நாட்கள் இன்னும் குறையும்.
ட்விட்டர் ஊழியர்களை நீக்கியது சரியா?அமெரிக்க சட்டம் சொல்வது என்ன? மஸ்க் மீது வழக்கு
நிறுவனங்களுக்கு இடையே பரிமாற்ற அடிப்படையில் எல்1 விசாவில் வந்துள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டவுடனே நாட்டிலிருந்து வெளியேற வேண்டும். அந்த ஊழியரை வேறு நிறுவனத்துக்கு மாற்ற முடியாது” எனத் தெரிவித்தார்