Elon MuskTwitter: தவறு நடந்துவிட்டது! பணிநீக்கம் செய்யப்பட்ட பலரையும் மீண்டும் அழைக்கிறது ட்விட்டர்

By Pothy Raj  |  First Published Nov 7, 2022, 9:26 AM IST

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியபின், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணநீக்கம் செய்தநிலையில், பணநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலரையும் ட்விட்டர் திரும்ப அழைத்துள்ளது.


டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியபின், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணநீக்கம் செய்தநிலையில், பணநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலரையும் ட்விட்டர் திரும்ப அழைத்துள்ளது.

தவறு நடந்துவிட்டது எனக் கூறி 12-க்கும் மேற்பட்ட ஊழியர்களை மீண்டும் பணிக்கு வரக் கூறி ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.

Tap to resize

Latest Videos

ட்விட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கின் மெட்டா நிறுவனமும் ‘மெகா ஆட்குறைப்பில்’ இறங்குகிறது

ட்விட்டர் நிறுவனத்தை 40 ஆயிரம் கோடி டாலருக்கு எலான் மஸ்க் வாங்கிபின், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அதிரடியா நடவடிக்கை எடுத்து, பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கி உத்தரவிட்டார். 

இந்த பணி நீக்கத்தில், மூத்த அதிகாரிகளான சிஇஓ பராக் அகர்வால், நிதித்துறை தலைவர் நெட் செகல், மூத்த சட்ட அதிகாரி விஜயா கடே, சீன் எட்ஜெட் ஆகியோரையும் தலைமை சந்தைத் தொடர்பு அதிகாரி லெஸ்ஸி பெர்லாண்ட், வாடிக்கையாளர் தொடர்பு தலைமை அதிகாரி சாரா பெர்சனோட், ஜீன் பிலிப் ஆகியோரையும் வெளியேற்றப்பட்டனர். 

எலான் மஸ்க்கின் ட்விட்ர் நடவடிக்கை சர்வதேச அளவில் விவாதப்பொருளாதானது. இந்நிலையில் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களில் 12க்கும் மேற்பட்டவர்களை மீண்டும் வேலைக்கு திரும்புமாறு ட்விட்டர்நிறுவனம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன

ட்விட்டர் ஊழியர்களை நீக்கியது சரியா?அமெரிக்க சட்டம் சொல்வது என்ன? மஸ்க் மீது வழக்கு

ப்ளூம்பெர்க் செய்தி கூறுகையில் “ ட்விட்டர் நிறுவனம் பணிநீக்கிய ஊழியர்களில் 12க்கும் மேற்பட்டவர்களை மீண்டும் வேலைக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தவறுதலாக வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டீர்கள்.

 ட்விட்டரில் புதிய அம்சங்களை உங்களின் பணி மற்றும் அனுபவம் அவசியம் என்பதை எலன் மஸ்க் மற்றும், நிர்வாகம் உணரும் முன்பே விடுவிக்கப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ட்விட்டர் நிறுவனம் தனது செயலியை ஆப்பிள் ஸ்டோரில் அப்டேட் செய்து, ப்ளூ டிக் வாங்க நினைப்பவர்களுக்கு 8 டாலர் கட்டணம் விதிக்கும்வழிமுறையை அறிமுகப்படுத்தியது.

இந்தியாவின் ட்விட்டர் நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களும் நீக்கம்: மார்க்கெட்டிங் டீமே காலி!

ட்விட்டர் நிறுவனம், வேலையிலிருந்து நீக்கப்பட்ட பலரை மீண்டும் அழைத்துள்ளது குறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டது
 

click me!