ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா என்பது ஆப்பிடிக்க நாடுகளில் ஒன்று. அங்கு பிரிஷிஷியன் ஏர்லைன்ஸ் விமானம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த விமான இன்று 39 பயணிகள் மற்றும் 4 விமானிகள் உட்பட 43 பேருடன் தார் எஸ் சலாமிலிருந்து புகோபாவுக்கு சென்றுக்கொண்டிருந்தது.
இதையும் படிங்க: போலி இந்துத்துவா பயங்கரவாத தாக்குதல்.. லெய்செஸ்டர் வகுப்புவாத மோதல் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள விக்டோரியா என்ற ஏரி அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதுக்குறித்து தகவலறிந்து வந்த மீட்பு படையினர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 26 பேரை மீட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் இந்தியா பேசப்போவது என்ன ?
இதை அடுத்து உள்ளூர் மீனவர்களின் உதவியோடு மீட்பு படையினர் ஏரியில் மூழ்கியவரை தேடி வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக விமானம் ஓடு தளத்திற்கு 100மீ முன்பாகவே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதை அடுத்து மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.