என்னை சுட்ட இடத்திலிருந்து பேரணி தொடரும்… இம்ரான் கான் அதிரடி!!

By Narendran S  |  First Published Nov 7, 2022, 12:36 AM IST

சுட்ட இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடருவோம் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 


சுட்ட இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடருவோம் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார். முன்னதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கான் கடந்த 3 ஆம் தேதி கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் அணிவகுப்பு சென்றிருந்தார்.

இதையும் படிங்க: தான்சானியாவில் உள்ள ஏரியில் விழுந்த விமானம்... உள்ளே இருந்த பயணிகளின் நிலை என்ன?

Tap to resize

Latest Videos

அப்போது அவரை நோக்கி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் இம்ரான் கான் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது. இம்ரான் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: போலி இந்துத்துவா பயங்கரவாத தாக்குதல்.. லெய்செஸ்டர் வகுப்புவாத மோதல் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த நிலையில் சுட்ட இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடருவோம் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், நான் சுடப்பட்ட அதே இடத்தில் இருந்து மீண்டும் பேரணி தொடரும். நான் லாகூரில் இருந்து கொண்டே பேரணியில் உரையாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!