ஒரு நாள் இரவில் வங்கிக் கணக்கில் ரூ. 10 கோடி; அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரி!!

Published : Nov 07, 2022, 01:36 PM IST
ஒரு நாள் இரவில் வங்கிக் கணக்கில் ரூ. 10 கோடி; அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரி!!

சுருக்கம்

திடீரென ஒருநாள் இரவில் பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி ஒருவர் கோடீஸ்வரர் ஆனார். இதையடுத்து வங்கி அவரது வங்கி ஏடிஎம் கார்டை முடக்கியது.   

நமது பர்சில் அல்லது வீட்டில் திடீரென நமக்கு 100 அல்லது 1000 ரூபாய் கிடைத்து விட்டால், ஆச்சரியமாக இருக்கும். சந்தோஷம் பெருகும். வீடே பரபரப்பாக அதுகுறித்துதான் பேசும். ஆனால், ஒருவரது வங்கி கணக்கில் ரூ. 10 கோடி கிடைத்தால் எப்படி இருக்கும். பாகிஸ்தான் நாட்டில் ஆமிர் கோபாங்க் என்பவர் காவல்துறையில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது வங்கிக் கணக்கில் மாத சம்பளத்துடன், ரூ.10 கோடி கிரடிட் ஆகி இருக்கிறது. ஆனால், யார் இந்தப் பணத்தை இவரது வங்கிக் கணக்கில் சேர்த்தனர் என்பது தெரியவில்லை. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாது கதியாகிவிட்டது.

இவர் கராச்சியில் புலனாய்வு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது வங்கிக் கணக்கில் இவ்வளவு பணம் இருப்பது கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஆமிர் கோபாங்க் அளித்திருந்த பேட்டியில், ''நான் இதுவரை இந்தளவிற்கு பணத்தை பார்த்தது இல்லை. ஆதலால் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னுடைய வங்கிக் கணக்கில் சில ஆயிரம் ரூபாயைத் தவிர பெரிய அளவில் பணம் இருப்பு இருந்ததில்லை. வங்கியில் இருந்து எனக்கு அழைப்பு வந்த பின்னர்தான், வங்கியில் இவ்வளவு பணம் கிரடிட் ஆகி இருப்பது குறித்து அறிந்து கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Twitter layoff:60 நாட்கள் கெடு!அமெரிக்காவில் ட்விட்டர் பணியிலிருந்து நீக்கப்பட்ட இந்தியர்களுக்குச் சிக்கல்

இந்தப் பணத்தை எடுப்பதற்கு முன்பு அல்லது அறிந்து கொள்வதற்கு முன்பே இவரது ஏடிஎம் கார்டை வங்கி முடக்கிவிட்டது. தற்போது இவரது வங்கிக்கு எப்படி இவ்வளவு பெரிய ரொக்கம் அனுப்பப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோன்று பாகிஸ்தான் நாட்டின் லர்கானா, சுக்கூர் ஆகிய இடங்களிலும் சில போலீஸ் அதிகாரிகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லர்கானாவில் மூன்று போலீஸ் அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளுக்கு தலா ரூ. 5 கோடியும், சுக்கூரில் ஒருவரது வங்கிக் கணக்கில் ரூ. 5 கோடியும் கிரடிட்  ஆகியுள்ளது.

கச்சா எண்ணெய் திருட்டு! 8 இலங்கை மாலுமிகள் அடங்கிய கப்பலை சிறைபிடித்த நைஜீரியா

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!