"புடின் தான் என் கணவரைக் கொன்றார்" - பரபரப்பு குற்றச்சாட்டை கூறிய அலெக்ஸி நவல்னியின் மனைவி! முழு விவரம்!

By Ansgar R  |  First Published Feb 19, 2024, 7:51 PM IST

Vladimir Putin : இன்று திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோ உரையில், கண்ணீரை அடக்கியபடி பேசிய யூலியா நவல்னயா, "மூன்று நாட்களுக்கு முன்பு விளாடிமிர் புடின் எனது கணவர் அலெக்ஸி நவல்னியைக் கொன்றார்" என்று கூறியுள்ளார். 


ஆர்க்டிக் வட்டத்திற்குள் உள்ள மாஸ்கோவிற்கு வடகிழக்கே சுமார் 2,000 மைல் (1,200 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கார்ப் என்ற இடத்தில் உள்ள சிறைக் காலனியில், நடை பயிச்சி மேற்கொண்டிருந்த அலெக்ஸி நவல்னி, திடீரென்று சுயநினைவை இழந்து கீழே விழுந்து இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று வெளியிட்ட வீடியோவில் புடின் தான் தனது கணவரை கொன்றார் என்று கூறிய அலெக்ஸியின் மனைவி. "தனது கணவர் அலெக்ஸி மூன்று வருட சிறை தண்டனை மற்றும் பல சித்திரவதைகளை அனுபவித்த பிறகு அந்த ஆர்டிக் சிறைக் காலனியில் இறந்தார்" என்று அந்த பதிவில் கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு இப்போது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை விட அதிகம்.. எவ்வளவு தெரியுமா?

ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தனது கணவரின் பக்கத்தில் இருந்த யூலியா நவல்னயா, தனது பணியைத் தொடர்வேன் என்று உறுதியளித்துள்ளார். "அலெக்ஸிக்காகவும் நமக்காகவும் நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், முன்பை விட மிகவும் நம்பிக்கையாகவும், கடுமையாகவும் சண்டையிடுவதுதான்," என்று அவர் கூறினார்.

"போருக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக, அநீதிக்கு எதிராக, நியாயமான தேர்தல்களுக்காகவும், பேச்சு சுதந்திரத்திற்காகவும் போராடுவதற்கும், நமது நாட்டை மீட்க போராடுவதற்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார் அவர். தன் கணவனைக் கொன்றவர்களை வெளிக்கொணரப்போவதாகவும் சபதம் செய்துள்ளார்.

"மூன்று நாட்களுக்கு முன்பு புடின் ஏன் அலெக்ஸியைக் கொன்றார் என்பது எங்களுக்குத் தெரியும். இந்தக் குற்றத்தை யார் செய்தார்கள், எப்படிச் செய்தார்கள் என்பதை நாங்கள் நிச்சயமாகக் கண்டுபிடிப்போம். நாங்கள் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவோம், முகங்களைக் காட்டுவோம்," என்று அவர் தனது உரையில் சூளுரைத்தார். 

ரஷ்ய அதிகாரிகள் இதுவரை நவல்னியின் உடலை அவரது தாய் மற்றும் வழக்கறிஞரிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர், இது "கொலையாளிகள்" "தங்கள் தடங்களை மறைப்பதற்காக" மேற்கொண்ட நடவடிக்கை என்று கூறிய அவரது ஆதரவாளர்களை இன்னும் அதிக கோபப்படுத்தியுள்ளார் அலெக்ஸியின் மனைவி.

உங்களிடம் இந்திய டிரைவிங் லைசன்ஸ் இருக்கா..? அப்போ உடனே கிளம்புங்க இந்த நாடுகளுக்கு!

click me!