உங்களிடம் இந்திய டிரைவிங் லைசன்ஸ் இருக்கா..? அப்போ உடனே கிளம்புங்க இந்த நாடுகளுக்கு!

By Kalai Selvi  |  First Published Feb 19, 2024, 7:35 PM IST

இந்திய ஓட்டுநர் உரிமத்தை வைத்து வெளிநாட்டில் வாகனம் ஓட்ட முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்திய ஓட்டுனர் உரிமத்தை வைத்து நீங்கள் ஓட்டக்கூடிய நாடுகளை பற்றி இங்கு பார்க்கலாம்.


வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு வாகனம் ஓட்டுவது கவலைக்குரிய விஷயமாக இருக்கலாம். இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு ஓட்டலாமா வேண்டாமா? என்ற கேள்வி உங்களுடைய மனதிலும் எழலாம். உங்களுக்கு தெரியுமா பல நாடுகள் இந்திய ஓட்டுநர் உரிமத்தை ஏற்றுக்கொள்கின்றன. சரியான இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் நீங்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும் அத்தகைய நாடுகளைப் பற்றி இங்கு நாம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

Tap to resize

Latest Videos

அமெரிக்கா: இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்து நீங்கள் 1 வருடம் அமெரிக்காவில் வாகனம் ஓட்டலாம். இதற்கு உங்கள் ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாக வேண்டும் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் DL ஆங்கிலத்தில் இல்லையென்றால், நீங்கள் அமெரிக்காவில் உங்கள் ஓட்டுநர் உரிமம் வைத்து வாகனம் ஓட்ட முடியாது. இது தவிர, வாகனம் ஓட்டுவதற்கு முன், நீங்கள் அமெரிக்காவிற்கு வந்த தேதி எழுதப்பட்ட I-94 படிவத்தையும் நிரப்ப வேண்டும்..

ஜெர்மனி: இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்து 6 மாதங்களுக்கு ஜெர்மனியில் வாகனம் ஓட்டலாம். நீங்கள் ஜெர்மனிக்குச் சென்று அங்கு வாகனம் ஓட்ட திட்டமிட்டால், தேவையான அனைத்து ஆவணங்களையும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். இங்கும் வாகனம் ஓட்டுவதற்கு உங்கள் ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்காவில் வாகனம் ஓட்ட, உங்கள் இந்திய ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். நீங்கள் இங்கே ஒரு காரை வாடகைக்கு எடுத்தால், முதலில் உங்கள் DL ஐ ஆங்கிலத்தில் காட்ட வேண்டும். மேலும், உரிமத்தில் உங்கள் கையொப்பமும் புகைப்படமும் இருக்க வேண்டும்.

நியூசிலாந்து: நியூசிலாந்தில் கார் ஓட்டுவதற்கு 21 வயது நிரம்பியவராகவும், ஆங்கிலத்தில் இந்திய ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். உங்கள் இந்திய ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இல்லை என்றால், நியூசிலாந்து அரசாங்கத்திடம் இருந்து ஆங்கிலத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

சுவிட்சர்லாந்து: உலகின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்தின் அழகை நீங்கள் வாகனம் ஓட்டி ரசிக்க விரும்பினால், உங்கள் வாகன ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்திய ஓட்டுநர் உரிமம் மூலம் இங்கு ஒரு வருடம் ஓட்டலாம்.

இதையும் படிங்க: ரொம்ப கம்மி பட்ஜெட்டில் லடாக்கை ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு?

ஆஸ்திரேலியா: நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நீங்கள் இந்திய உரிமத்தில் வாகனம் ஓட்டலாம், ஆனால் வடக்கு ஆஸ்திரேலியாவில் மூன்று மாதங்களுக்கு மட்டுமே வாகனம் ஓட்ட முடியும். இது தவிர, உங்கள் ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:  கம்மி விலையில் பூமியின் சொர்க்கமான காஷ்மீரை சுற்றிப் பார்க்க வேண்டுமா.. சிறந்த டூர் பேக்கேஜ் இது..

கனடா: இங்கு நீங்கள் வாகனம் ஓட்ட ஆங்கிலத்தில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இங்கு இந்திய ஓட்டுநர் உரிமம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு உங்களுக்கு கனடிய ஓட்டுநர் உரிமம் தேவைப்படும்.

பிரான்ஸ்: பிரான்சிலும் இந்திய உரிமத்தில் கார் ஓட்டலாம். இங்கு இந்திய ஓட்டுநர் உரிமத்தில் வாகனம் ஓட்ட ஒரு வருடம் வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த நாட்டில் உங்கள் உரிமம் ஆங்கிலத்திற்கு பதிலாக பிரெஞ்சு மொழியில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நோர்வே: நோர்வே ஐரோப்பிய கண்டத்திலும் உலகிலும் ஒரு அழகான நாடு. இந்திய ஓட்டுநர் உரிமம் மூலம் மொத்தம் மூன்று மாதங்கள் மட்டுமே இங்கு வாகனம் ஓட்ட முடியும்.

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் தங்களுடைய சர்வதேச ஓட்டுநர் உரிமத்தில் ஒரு வருடத்திற்கு அங்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!