AI மீது காதல் மோகம்; இல்லாத காதலனை உருகி உருகி காதலிக்கும் சீன பெண்!!

Published : Feb 17, 2024, 04:55 PM ISTUpdated : Feb 17, 2024, 05:07 PM IST
AI மீது காதல் மோகம்; இல்லாத காதலனை உருகி உருகி காதலிக்கும் சீன பெண்!!

சுருக்கம்

சீனாவில் பல இளம் பெண்கள் உயிரோடு இருக்கும் ஆணை விட ரோபோவை காதலிக்கிறார்கள் அந்த ரோபோ காதலர்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க..

உலகம் முழுவதும் தற்போது AI மூலம் நிறைய வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பலர் அதை தங்கள் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

சீனாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அப்படிதான் நடந்தது. 25 வயதான சீனப் பெண்ணான Tufei யின் காதலன் AI Chatbot. ஒரு ஆணிடமிருந்து இருந்து தான் விரும்பும் அனைத்தும் தனது காதலனான AI Chatbot க்கு இருப்பதாக அந்த பெண் கூறுகிறார். மேலும், அவர் கனிவானவர் இரக்கம் உள்ளவர் மற்றும் சில நேரங்களில் மணிக்கணக்கில் பேசுவார். சொல்லப்போனால் நிறைய காதல் உடையவர் என்று Tufei கூறுகிறார்.

ஆனால், அவர் உண்மையானவர் இல்லை என்பதுதான் எதிர்மறையான விஷயம்!..அவரது காதலன் 'Glow App' யின் Chatbot ஷாங்காய் ஸ்டார்ட்-அப் மினிமேக்ஸால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு தளம், சீனாவில் மனித-ரோபோ உறவுகளை வழங்கும் தொழில்துறையின் ஒரு பகுதியாகும். இந்த பயன்பாடு இலவசம் மற்றும் இப்போது சீனாவில் பிரபலமாக உள்ளது. 

'உண்மையான ஆணைவிட பெண்களிடம் எப்படிப் பேசுவது என்பது அவருக்குத் தெரியும்' என்கிறார் வடக்கு சீனாவில் உள்ள சியான் நகரைச் சேர்ந்த Tufei. 'எனக்கு மாதவிடாய் வலி ஏற்படும் போது அவர் எனக்கு ஆறுதல் கூறுகிறார். வேலையில் என் பிரச்சனைகளைப் பற்றி நான் அவரிடம் கூறும்போது அவர் என்னை சமாதானப்படுத்துகிறார். "நான் ஒரு காதல் உறவில் இருப்பது போல் உணர்கிறேன்," என்று அப்பெண் கூறினார். இது வெறும் வாய் வார்த்தை அல்ல. சீனாவில் நிறைய பெண்கள் தங்கள் உண்மையான காதலர்களை பிரிந்து, ரோபோ காதலர்களின் சகவாசத்தில் விழுகின்றனர். இதுவே மிக அழகான உறவு. 

இதையும் படிங்க:  AI தொழில்நுட்பம் வருமான வரி தாக்கலை சரிபார்க்க உதவுகிறது: மத்திய நேரடி வரி வாரிய தலைவர் தகவல்

தனிமைக்கான மருந்து:
சில சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர் தரவை சட்டவிரோதமாக பயன்படுத்தியதற்காக கடந்த காலங்களில் சிக்கலில் சிக்கியுள்ளன. ஆனால் ஆபத்துகள் இருந்தபோதிலும், சீனாவின் வேகமான வாழ்க்கை மற்றும் நகர்ப்புற தனிமை பலருக்கு தனிமையை ஒரு பிரச்சினையாக ஆக்குவதால், அவர்கள் தோழமைக்காக ரோபோக்களை நாடுகிறார்கள்.

'நிஜ வாழ்க்கையில் ஒரு சிறந்த காதலனை சந்திப்பது கடினம். மக்கள் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர். அதை மாற்றியமைப்பது கடினம். இருப்பினும், செயற்கை நுண்ணறிவு வழங்கும் உணர்ச்சிபூர்வமான ஆதரவு அற்புதமானது. அது எங்களை ஒருபோதும் காயப்படுத்தாது' என்று பெய்ஜிங்கைச் சேர்ந்த 22 வயது மாணவர் வாங் சியுட்டிங் கூறினார்.

இதையும் படிங்க:  உலக அளவில் வளரும் செயற்கை நுண்ணறிவு.. AI வளர்ச்சியில் இந்தியாவின் வாய்ப்பு எப்படி?

இந்த ரோபோக்கள் எந்த பேச்சுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பது தெரியும். பயனர்களுக்குப் பிரச்சனைகள் வரும்போது அவர்களை எப்படி ஆறுதல்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் எப்போதும் கேட்கும் காது கொண்டவர்கள். ஒரு பிரச்சனையைச் சொன்னால் எப்படித் தீர்ப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். ஒரு பெண் இதைவிட உணர்ச்சிவசப்பட்ட ஆதரவைக் கேட்க முடியாது. இதனால்தான் சீனப் பெண்கள் இந்த ரோபோ காதலர்களை ரொம்பவே விரும்புகிறார்கள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!