உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா... கடுப்பான புதின் கண்டனம்!!

By Narendran S  |  First Published Mar 20, 2022, 10:48 PM IST

உக்ரைனுக்கு நவீன ஏவுகணைகள் மற்றும் ஸ்டிங்கர் ராக்கெட்டுகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக, உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சிலின் செயலர் ஒலெக்சி டேனிலோவ் அறிவித்துள்ளதை அடுத்து அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவது சட்ட விரோதமானது என்று ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். 


உக்ரைனுக்கு நவீன ஏவுகணைகள் மற்றும் ஸ்டிங்கர் ராக்கெட்டுகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக, உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சிலின் செயலர் ஒலெக்சி டேனிலோவ் அறிவித்துள்ளதை அடுத்து அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவது சட்ட விரோதமானது என்று ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று 25 ஆவது நாளாக தாக்குதலை தொடர்ந்தது ரஷ்யா. உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்துள்ள ரஷ்ய படைகள், வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு நவீன ஏவுகணைகள் மற்றும் ஸ்டிங்கர் ராக்கெட்டுகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக உக்ரைன் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சிலின் செயலர் ஒலெக்சி டேனிலோவ் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனுக்கு அமெரிக்கா நவீன ஏவுகணைகள் மற்றும் ஸ்டிங்கர் ராக்கெட்டுகளை வழங்கியுள்ளது. விரைவில் அந்த ஆயுதங்கள் தலைநகர் கீவ்வுக்கு வந்து சேரும். பிராந்திய பகுதிகளில் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க அந்த ஆயுதங்கள் பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த செயலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாடு, அந்த அமைப்பில் இடம் பெறாத நாட்டுக்கு இவ்வாறு ஆயுதங்களை வழங்குவது சட்ட விரோதமானது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுக்குறித்து பேசுகையில், ரஷ்யா தாக்குதல்களை நிறுத்தி விட்டு உடனடியாக சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதுமே தயாராக இருக்கிறோம். உக்ரைனின் ஒருமைப்பாடு மற்றும் நீதியை காப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த போரால் இதுவரை ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போரால், ரஷ்யாவில் பல தலைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதை தவிர்க்கவே முடியாது. தாக்குதலால் சிதிலமடைந்துள்ள மரியபோல் நகருக்கு மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்லும் தன்னார்வலர்களை ரஷ்ய ராணுவம் தடுக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

click me!