கடும் பொருளாதார சிக்கலில் இலங்கை... விண்ணை முட்டும் விலைவாசிகள்!!

By Narendran S  |  First Published Mar 20, 2022, 4:34 PM IST

இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை எட்டியுள்ளது. 


இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமான நாடுகளில் பொருளாதர நெருக்கடி ஏற்பட்டது. அந்த வகையில் இலங்கை மீண்டெழ முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு மக்கள் மீதான சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பால், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பசியால் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்க டாலர் கையிருப்பு இல்லாத இலங்கையில், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கு மத்தியில் நாளொன்றுக்கு 7 மணி நேரங்கள் மின்வெட்டும் நிலவுகிறது.

Latest Videos

undefined

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவுப்பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி இலங்கையில் ஒரு கிலோ அரிசி 300 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் 300 ரூபாய்க்கும், டீசல் 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கி விட்டனர். அன்னியச் செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்து விட்டதால் இந்த பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று தெரிந்தும், ராஜபக்சே தலைமையிலான அரசு, அலட்சியமாக இருந்தது என்று இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு 1.6 பில்லியன் டாலர்களாக குறைந்து விட்டது. இதனால் ரூபாயின் மதிப்பை குறைக்க வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு ஏற்பட்டது. ரூபாயின் மதிப்பு குறைய, குறைய பொருட்களின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து, இன்று உச்சத்தில் நிற்கிறது. இன்று இலங்கையில் ஒரு முட்டையின் விலை 40 ரூபாய், ஒரு கிலோ அரிசி 300 ரூபாய், ஒரு லிட்டர் பெட்ரோல் 300 ரூபாய், டீசல் 280 ரூபாய், வெங்காயம் ஒரு கிலோ 250 ரூபாய். இந்த விலை உயர்வால் கடும் கோபத்தில் உள்ள மக்கள் வீதிக்கு வந்து போராடத் துவங்கி விட்டனர். இலங்கைக்கு நெருக்கடி நேரங்களில் முதலாவதாக கை கொடுக்கும் இந்தியா, உடனடியாக ரூ.7,500 கோடியை அந்நாட்டுக்கு அளித்துள்ளது. சீனாவிடமும் இலங்கை உதவி கொரியுள்ளது. 

click me!