கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை.. தாள்கள் மற்றும் மை வாங்க காசுயில்லை.. தேர்வுகள் ரத்து..

By Thanalakshmi V  |  First Published Mar 19, 2022, 9:50 PM IST

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் தாள்கள் மற்றும் மை பற்றாக்குறையால் பள்ளிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
 


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் தாள்கள் மற்றும் மை பற்றாக்குறையால் பள்ளிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அந்நிய செலாவாணி குறைவால் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனிடையே விலைவாசி உயர்வை கண்டித்து, அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலக வேண்டும் என்று கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இலங்கையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலாத்துறை முடங்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஜிடிபி மதிப்பு மைனஸ் 16.3 சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அந்நியச் செலாவணி குறைந்ததால், இலங்கை பணத்தின் மதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. 

இதனிடையே பணத்தின் மதிப்பு குறைந்ததால், மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.250, சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 உளுந்து கிலோ ரூ.2,000 ஆகவும் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதில் கூட பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுமட்டுமின்றி அந்நிய செலவாணி கையிருப்பு குறைவால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. மின்சாரத்திற்கு தேவையான நிலக்கரி வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

இலங்கை கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தப்ய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவின் உருவங்கள் பொறிக்கப்பட்ட புகைப்படங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.

பொருளாதார நெருக்கடியால் தாள்கள் மற்றும் மை பற்றாக்குறையால் பள்ளிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசு இலங்கைக்கு ரூ 7,500 கோடி கடன் உதவி அளிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கடுமையான விலை உயர்வு.. வெடித்த மக்கள் போராட்டம்.. பதவி விலகக்கோரி அதிபர் உருவபடம் எரிப்பு..

click me!