மாணவர்கள் போராட்டம் எதிரொலி : ஜாஃப்னாவில் கடைகள் அடைப்பு – அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 02:23 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
மாணவர்கள் போராட்டம் எதிரொலி : ஜாஃப்னாவில் கடைகள் அடைப்பு – அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

சுருக்கம்

யாழ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் 2 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நீதிகேட்டு மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.

யாழ்ப்பாணம் குளப்பிடி சந்திப்பு பகுதியில் உள்ள கொக்குவில் சோதனைச் சாவடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை பைக் ஓட்டி வந்த பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். முதலில் மாணவர்களை கொலை செய்யவில்லை, அந்த மாணவர்கள் வந்த பைக் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது என போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், உடற்கூறு ஆய்வுக்குப்பின் மாணவர்கள் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் எடுக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தை ஒப்பு கொண்டனர். இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த மாணவர்கள் படுகொலை தொடர்பாக உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என காவல்துறை தலைவருக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்கள் கொலை செய்யப்பட்டதைற்கு, நீதி கேட்டு யாழ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து நேற்று போராட்டம் நடத்தினார்கள். மேலும், வடமாநில ஆளுநர் அலுவலகம், யாழ்ப்பாணம் அரசு செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

 கொலைசெய்யப்பட்ட மாணவர்கள் குடும்பத்தினருக்கு போதுமான இழப்பீடு வழங்கக் கோரி மாணவர்கள் கோஷமிட்டனர். மாணவர்கள் கையில் போலீசாரின் அடுக்குமுறைகளைக் கண்டித்த பதாகைகள் வைத்திருந்தனர்.  இதனால், முக்கிய ஏ9 நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து, இலங்கையில் உள்ள 6 முக்கிய தமிழர் அமைப்பை சேர்ந்த அரசியல் கட்சிகள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தன. அவர்களுக்கு ஆதரவாக பாஃப்னாவில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதற்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும், சில இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

அமெரிக்காவை நம்ப முடியாது..! போரில் சமரசமே கிடையாது..! அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி எச்சரிக்கை..!
ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.. 100 ராணுவ வீரர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!