பாகிஸ்தான் காவல் பயிற்சி மையத்தில் தாக்குதல்: 57 பேர் பலி

Asianet News Tamil  
Published : Oct 25, 2016, 11:36 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
பாகிஸ்தான் காவல் பயிற்சி மையத்தில் தாக்குதல்: 57 பேர் பலி

சுருக்கம்

பாகிஸ்தானின் காவல் பயிற்சி மையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவின் காவல் பயிற்சி மையம் உள்ளது.

இங்கு தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், காவல் பயிற்சி மையத்தில் இருந்த காவலர்கள் 33 பேர் உயிரிழந்துள்ளதாக முதலில் தகவல் வெளியானது. தற்போது  57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 51 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பயிற்சி மையத்தில் இருந்த 200 முதல் 600 காவல் அதிகாரிகள் பத்திரமாக மீட்டக்கப்பட்டுள்ளதாவும், 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்னர். சிகிச்சை பெறுபவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லஷ்கர் இ ஜவாங்கி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!