லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முற்றுகை !! இந்தியர்கள் ஆவேசம் !!

By Selvanayagam P  |  First Published Feb 16, 2019, 10:20 PM IST

ஜம்முவில் தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து  லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை இந்தியர்கள் ஆவேசமாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 


இந்தியாவில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம், காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச்செய்து கொடிய தாக்குதல் நடத்தினர். நாட்டையே உலுக்கி உள்ள இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

Latest Videos

காஷ்மீரில் துணை ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

உலக நாடுகள் முழுவதும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை அங்குள்ள இந்தியர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியர்கள் ஆவேசமாக முழுக்கமிட்டனர். தொடர்நது ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

click me!