பாரிஸில் 8 மாடி கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாரிஸில் 8 மாடி கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் எர்லாங்கர் வீதியில் உள்ள 8 தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் நள்ளிரவில் 7 மற்றும் 8-வது தளங்களில் திடீரென தீப்பற்றியது. இதனால் அந்த தளங்களில் வசித்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இது தொடர்பாக உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மற்ற தளங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.