வரப்போகிறது மிதக்கும் நகரம்!

By Asianet TamilFirst Published Feb 2, 2019, 12:55 PM IST
Highlights

ராட்சத திமிங்கலமும், ஜெல்லி ஃபிஷ்ஷும் காதலிக்கும் பசிபிக் பெருங்கடல். பத்தாயிரம் அடிக்கும் அதிகமான ஆழத்தைக் கொண்ட அதன் மையப்பகுதி. அங்கே அழகாக அமர்ந்திருக்கும் ஃப்ரெஞ்ச் பாலினேசியா தீவுக்கூட்டங்கள்.
 
ராட்சத திமிங்கலமும், ஜெல்லி ஃபிஷ்ஷும் காதலிக்கும் பசிபிக் பெருங்கடல். பத்தாயிரம் அடிக்கும் அதிகமான ஆழத்தைக் கொண்ட அதன் மையப்பகுதி. அங்கே அழகாக அமர்ந்திருக்கும் ஃப்ரெஞ்ச் பாலினேசியா தீவுக்கூட்டங்கள்.

இந்த இடத்தில்தான் கடலின் நீர் மட்டத்துக்கு மேல் அந்தரத்தில் தொங்கியபடியே ஒரு மிதக்கும் நகரம் வரப்போகிறது. வசதியான கான்கிரீட் வீடுகள். ஷாப்பிங் மால்கள். மொத்தத்தில் இடியாப்பம் முதல் இன்டர்நெட் வரை சகலமும் இந்நகரத்தில் கிடைக்கும்.  

‘‘மக்கள் இதுவரை செய்யாத - பார்க்காத ஒன்றை செய்துகாட்டுவதில்தான் ‘கிக்’ இருக்கிறது’’ என்கிறார் அமெரிக்காவின் கடல்சார் இன்ஸ்டிடியூட்டின் நிர்வாகி. 

இவர்கள் வசம்தான் இந்த ‘மிதக்கும் நகர’த்தை உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஸோ, ஹாலிவுட் படங்களில் வருவது போல் வானில் பறக்கும் கார்கள், கடலுக்கு அடியில் ரகசியமாக கட்டப்பட்டிருக்கும் வில்லனின் கண்ணாடி மாளிகை, தானாகவே நகரும் வீடு என... திரையில் வாயைப் பிளந்து நாம் பார்த்த காட்சிகள் அனைத்தையும் விரைவில் நிஜத்தில் கண்டு களிக்கப் போகிறோம்!
 
click me!