பிரிட்டனில் நடைபெற்ற ஏலத்தில் அந்நாட்டு இளவரசி டயானா திருமணத்தின்போது அணிந்திருந்த கவுன் ரூ.4.9 கோடிக்கு விலைபோயிருக்கிறது.
பிரிட்டனில் நடைபெற்ற ஏலத்தில் அந்நாட்டு இளவரசி டயானா திருமணத்தின்போது அணிந்திருந்த கவுன் ரூ.4.9 கோடிக்கு விலைபோயிருக்கிறது.
பிரிட்டன் இளவரசராக இருந்த சார்லஸ் – டயானா இருவரது திருமண நிகழ்ச்சியில் டயானா அணிந்திருந்த ஊதா நிற கவுன் மிகவும் புகழ்பெற்றது. காண்பவர் அனைவரையும் கவரும் வகையில் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட அந்த கவுன் ஆயிரக்கணக்கான முத்துகள், பட்டு இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது.
undefined
டயானா 1991ஆம் ஆண்டு வரையப்பட்ட அவரது ஓவியத்திலும் இந்த கவுன் அணிந்திருக்கிறார். பின்னர் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டோஷூட்டிலும் இதே கவுனில் காட்சி அளித்தார்.
சட்டத் தேர்வில் கலக்கிய ChatGPT! C+ கிரேடுடன் பாஸ் செய்து அசத்தல்!
விக்டர் எடெல்ஸ்டீன் என்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர் அந்த கவுனை உருவாக்கியுள்ளார். இந்தப் பிரபலமான கவுன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பே ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வந்தது.
இதில் அந்த கவுன் 6 லட்சம் டாலருக்கு ஏலம் போனது. அதாவது இந்திய ரூபாயில் ரூ.4.9 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இது ஏலத்துக்கு முன் கணித்திருந்த விலையைவிட ஐந்து மடங்கு அதிகம் ஆகும்.
From The India Gate: காங்கிரசின் பிரார்த்தனையும் ஆம் ஆத்மியின் தலைமைத் தேடலும்