அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு.. 3 பேர் பலி மற்றும் 4 பேர் காயம் - அதிர்ச்சி சம்பவம் !!

By Raghupati R  |  First Published Jan 28, 2023, 10:45 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், நான்கு பேர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது.


சனிக்கிழமை அதிகாலை கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது.

பெவர்லி க்ரெஸ்டில் அதிகாலை 2:30 மணிக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தெரிவித்தனர். சுடப்பட்ட ஏழு பேரில், நான்கு பேர் வெளியே நின்று கொண்டிருந்தனர் என்றும், கொல்லப்பட்ட மூவர் ஒரு வாகனத்திற்குள் இருந்தனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..ரூ.366 கோடி வரி மோசடி; சாலையோர வியாபாரி மீது புகார்.. வீட்டை தட்டிய ஜிஎஸ்டி அதிகாரிகள் - அதிர வைக்கும் பின்னணி

போலீசார் கூற்றுப்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் என்று இதுவரை வெளியாகவில்லை. இந்த மாதத்தில் கலிபோர்னியாவில் நடந்த நான்காவது துப்பாக்கிச்சூடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிடத்தக்க வகையில், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக, 2022ல் அமெரிக்காவில் 600க்கும் அதிகமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த திங்கள்கிழமை செனட்டர்கள் குழு ஃபெடரல் தாக்குதல் ஆயுதங்கள் தடை மற்றும் தாக்குதல் ஆயுதங்களை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக மாற்றுவதற்கான சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறைக்கு வலுவான நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் அறிவோம். பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் வீடுகள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கவும் நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?

இதையும் படிங்க..கள ஆய்வில் முதலமைச்சர்.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் - முதல்வர் ஸ்டாலின் அடித்த அடுத்த சிக்சர் !!

click me!