Britain MP Slams BBC:பிரதமர் மோடிக்கு ஆதரவு! பிபிசி சேனலை வெளுத்து வாங்கிய பிரிட்டன் எம்.பி

Published : Jan 28, 2023, 04:13 PM ISTUpdated : Jan 28, 2023, 05:06 PM IST
Britain MP Slams BBC:பிரதமர் மோடிக்கு ஆதரவு! பிபிசி சேனலை வெளுத்து வாங்கிய பிரிட்டன் எம்.பி

சுருக்கம்

Britain MP Slams BBC: பிரதமர் மோடியின் மரியாதையை, மாண்பைக் குலைக்கும் வகையிலான திட்டமிட்ட தாக்குதால பிபிசி ஆவணப்படம் அமைந்துள்ளது என்று பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் கடுமையாகச் சாடியுள்ளார்.

Britain MP Slams BBC பிரதமர் மோடியின் மரியாதையை, மாண்பைக் குலைக்கும் வகையிலான திட்டமிட்ட தாக்குதால பிபிசி ஆவணப்படம் அமைந்துள்ளது என்று பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் கடுமையாகச் சாடியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து பிபிசி “ India:The Modi Question”  என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிபிசி-யின் பிரதமர் மோடி ஆவணப்படம் ஒளிபரப்பு:ஏபிவிபி பதிலடி

ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பை மீறி இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். 

இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்தை பிரிட்டனைச் சேர்ந்த எம்.பி. பாப் பிளாக்மேன் கடுமையாகச் சாடியுள்ளார். காஷ்மீரில் 33 ஆண்டுகளுக்கு முன் இந்துக்கள் கொல்லப்பட்டதன் நினைவுதினம் கடந்த 25ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்தது. 

அதில் பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் பேசுகையில் “ பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படம் ஒருதரப்பானது. அவரை அவமதிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. கோத்ராவில் ரயிலில் வந்த இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அந்த ஆவணப்படம் பேசவில்லை, அதைப் புறக்கணித்துவிட்டது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அங்கு நடந்த கலவரத்தை அடக்கவும், கட்டுக்குள் கொண்டுவரவும் எடுத்துக்கொண்ட முயற்சிகளை பிபிசி சேனல் கணக்கில் கொள்ளவில்லை.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி மகன் கண்டனம்

காஷ்மீரில் 370வது பிரிவை திரும்பப் பெற்றது சரியானதுதான். காஷ்மீரில் உள்ள இந்து சமூகத்துக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும். அங்கு இந்துக்களை இனஅழிப்பு செய்து கொன்றது ஏற்ற முடியாதது. 

காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு அதிகரித்த காரணத்தால்தான் காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டார்.  இந்தியாவுடன் இணைந்தபின்பும் காஷ்மீருக்கென தனியாக விதிகள், அரசியலமைப்புச் சட்டம் இருந்ததை ஒருபோதும் பிரிட்டன் ஏற்கவில்லை.

பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படம் முற்றிலும் அவமானப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டது. குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவரை மிகவும் மோசமாக விமர்சித்து, அவரின் மதிப்பைக் குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட படமாக இருக்கிறது. 

PM Modi BBC documentary:பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தை கேரளாவிலும் திரையிட மாணவர்கள் ஏற்பாடு

நீங்கள் அந்த ஆவணப்படத்தைப் பார்க்கும் முன்ப, உங்களை அமைதிப்படுத்த சில மாத்திரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறேன். 2002ம் ஆண்டில் குஜராத் கலவரத்தில் தொடங்கி, இந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற ரயில் தீப்பிடித்ததைப் பற்றி ஆவணப்படம் குறிப்பிடுகிறது. ஆனால், ரயில் பெட்டியில் பெட்ரோலை ஊற்றி, இந்துக்களைக் கொன்றவர்கள் குறித்து பேசுவதைப் புறக்கணித்தது.

குஜராத் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர மோடி பேச்சுகள் மற்றும் நிலைமையை அமைதிப்படுத்த முயற்சிக்கும் பல வீடியோக்கள் காட்டப்படுகின்றன. ஆனால், நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முதல்வர் நரேந்திர இந்த கலவரங்களைத் தடுக்க எதுவும் செய்யவில்லை எனக் கூறி அவரைப் புறக்கணிக்கிறது. ஆனால், மோடி கலவரங்களை ஊக்குவிக்கவோ ஊக்கப்படுத்தவோ அவர் முயற்சித்ததில்லை
இவ்வாறு  பாப் பிளாக்மென் தெரிவித்தார்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!