சட்டத் தேர்வில் கலக்கிய ChatGPT! C+ கிரேடுடன் பாஸ் செய்து அசத்தல்!

By SG BalanFirst Published Jan 26, 2023, 1:24 PM IST
Highlights

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் ChatGPT என்ற மென்பொருள் அமெரிக்க சட்டப் பள்ளி வினாத்தாளுக்கு சரியான பதில்களை அறித்து பாஸ் ஆகியுள்ளது.

அண்மையில் தொழில்நுட்ப ஆர்வலர்களின் கவனத்தைக் கவர்ந்தது ChatGPT. கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மென்பொருள்தான் இது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

இந்த மென்பொருளில் கேட்கும் கேள்விகளுக்கு பெரும்பாலும் சரியான பதில்கள் கிடைப்பதால் இது எதிர்காலத்தில் கல்வி கற்பித்தல் முறையில் மாற்றத்திற்கு வித்திடக்கூடும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

மெக்டோரசாப்ட் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தரப்பில் ஆதரவு பெற்று உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருள் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக சட்டப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் ஜானத்தன் சோய், ChatGPT க்கு சட்டத் தேர்வு ஒன்றை வைத்திருக்கிறார். சட்டப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வினாத்தாள் ஒன்றில் இடம்பெற்ற கேள்விகளை ChatGPT ல் கேட்டு விடைகளை கவனித்திருக்கிறார் ஜானத்தன்.

கட்டுரை வடிவில் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் 12, சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கேள்விகள் 95 என அத்தனைக்கும் பதில் அளித்த ChatGPT C+ கிரேடு பெற்று பாஸ் ஆகிவிட்டது. கட்டுரை வடிவ பதில்களை எழுதுவதில், ChatGPT அடிப்படை சட்ட விதிகளைப் புரிந்துகொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

இதனிடையே ஏற்கெனவே நியூயார்க் மாகாண பள்ளிகளில் ChatGPT பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!