இலங்கையில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இலங்கையில் அந்நாட்டு சுதந்திர தினமான பிப்ரவரி 4ஆம் தேதிக்குள் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கருத்தொற்றுமை ஏற்படுத்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கே முயற்சி எடுத்துவருகிறார். கடந்த டிசம்பர் மாதம் முதல் தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அண்மையில், யாழ்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் திருவிழா கூட்டத்திலும் ரணில் விக்கிரமசிங்கே இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதை உறுதி செய்திருந்தார்.
undefined
இந்நிலையில், இன்று, வியாழக்கிழமை, அனைத்து கட்சி கூட்டத்துக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் நடக்கிறது இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெறுகிறது. இதில் பங்குகொள்ள நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இக்கூட்டத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபக்சே, சிறிசேனா, தமிழ் தேசிய கூட்டணி தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஈழத் தமிழ் மக்கள் கோரும் அரசியல் சுயாட்சி குறித்து இக்கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று வந்த நிலையில், இந்தக் கூட்டம் நடக்கிறது.