பிரதமர் மோடி மீதான பிபிசி ஆவணப்படம்; பளிச்சென பதில் அளித்த அமெரிக்க செய்தி தொடர்பாளர்!!

By Dhanalakshmi G  |  First Published Jan 24, 2023, 4:10 PM IST

கடந்த 2002ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது.  அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கலவரமும் வெடித்தது. இந்தக் கலவரத்தில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கண்டனங்கள் எழுந்தன. 


பிபிசி சேனல், பிரதமர் மோடி குறித்து “ India:The Modi Question”  என்ற பெயரில் ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் இரு பகுதிகளாக எடுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி வெளியான நிலையில் இதற்கு தேசிய அளவில் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. யூடியூப்களில் வெளியிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெத் பிரஸ் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''இந்தியாவுடனான அமெரிக்காவின் உலகளாவிய கூட்டாண்மைக்கு பல விஷயங்கள் உள்ளன. இதில் அரசியல், பொருளாதாரம் மட்டுமின்றி ஆழமான மக்களுக்கு இடையிலான உறவுகளும் உள்ளன. இந்தியாவின் ஜனநாயகம் துடிப்புடன் இருக்கிறது. இருநாடுகளையும் இணைக்கும் அனைத்து விஷயங்களையும் நாங்கள் ஒருங்கிணைந்து பார்த்து வருகிறோம். வலுப்படுத்தியும் வருகிறோம் என்று கூறியவர் இருநாடுகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளும் ராஜதந்திர உறவுகளை மேற்கோள் காட்டினார்.

Latest Videos

undefined

Mass Shooting in USA: அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிக் கலாச்சாரம்! 2 நாட்களில் 20 பேர் கொன்று குவிப்பு

மேலும், ''நீங்கள் என்ன ஆவணப்படம்  குறித்து கேட்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா, அமெரிக்க உறவுகளின் மதிப்புகள் மட்டுமே தெரியும்'' என்றார்.

இந்தியப் பிரதமர் குறித்த பிபிசியின் கருத்தில் உடன்படவில்லை என்று கடந்த வாரம் பிபிசி ஆவணப்படம் குறித்த கேள்விக்கு இந்திய வம்சாவளி பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்து இருந்தார். நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் வம்சாவளி எம்பி இம்ரான் ஹூசைன் எழுப்பிய கேள்விக்கு ரிஷி அவ்வாறு பதில் அளித்து இருந்தார்.  

Indians Layoff in USA:அமெரி்க்காவில் 80 ஆயிரம் இந்திய ஐ.டி பொறியாளர்கள் வேலையிழந்து தவிப்பு! அடுதது என்ன?

click me!