Pakistan Power Outage:இருளில் மூழ்கியது பாகிஸ்தான்! நாடுமுழுவதும் பெரியஅளவில் மின்சாரம் துண்டிப்பு

By Pothy Raj  |  First Published Jan 23, 2023, 1:53 PM IST

பாகிஸ்தான் முழுமைக்கும் மின்சாரம் சப்ளை செய்யும் தேசிய பகிர்மானத் தளத்தில் ஏற்பட்ட கோளாறால், அந்த நாடு முழுவதும் இருளில் மூழ்கியது.


பாகிஸ்தான் முழுமைக்கும் மின்சாரம் சப்ளை செய்யும் தேசிய பகிர்மானத் தளத்தில் ஏற்பட்ட கோளாறால், அந்த நாடு முழுவதும் இருளில் மூழ்கியது.

இது குறித்து பாகிஸ்தான் மின்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ இன்று காலை 7.34 மணிக்கு பாகிஸ்தானின் தேசிய மின்பகிர்மானத்தில் திடீரென மிகப்பெரிய கோளாறு ஏற்பட்டது. 

Latest Videos

undefined

கலிபோர்னியாவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு… 10 பேர் உயிரிழப்பு… சீனா புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கரம்!!

இதனால் நாடுமுழுவதும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டது. ஆனால், விரைந்து செயல்பட்டு செயல்முறையை இயல்புக்கு வந்துவிடுவோம்”எனத் தெரிவித்துள்ளது.இந்த திடீர் மின்தடையால், மிகப்பெரிய நகரங்களான கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர், பெஷாரவர் நகரங்கள் இருளில் மூழ்கின. 

மின்துறை அமைச்சர் குர்ரம் தஸ்தாகிர் அந்நாட்டு ஜியோ சேனலுக்கு அளித்த பேட்டியில் “ நாட்டின் பிரதான மின்பகிர்மான தளத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், நாடுமுழுவதும் மின்சப்ளை பாதிக்கப்பட்டது.

நியூசிலாந்து அடுத்த பிரதமர்! யார் இந்த கிறிஸ் ஹிப்கின்ஸ்? முழு விவரம் !

பெரிய கோளாறு அல்ல, விரைந்து சரி செய்யும் முயற்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். 
குளிர்காலத்தில் பெரும்பாலும் மின்சாரப் பயன்பாடு குறைவாக இருக்கும். இதனால், சிக்கன நடவடிக்கையாக, மின் உற்பத்தி செயல்முறையை நிறுத்தி வைத்துள்ளோம். காலையில் மீண்டும் இயக்கப்பட்டபோது,திடீரென கோளாறு ஏற்பட்டது, பல நகரங்களில் மின்சாரம் அழுத்தத்தில் தடை ஏற்பட்டது, ஏற்ற இறக்கம் இருந்தது. பெஷாவர், இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டுவருகிறது

அடுத்த 12 மணிநேரத்தில் நாடுமுழுவதும் சீரான மின்சப்ளை கிடைத்துவிடும் என உறுதியளிக்கிறேன்.கராச்சி நகரில் மின்சாரம் சில மணிநேரத்தில் இயல்புக்கு வந்துவிடும்”எனத் தெரிவித்தார்

அக்டோபர் மாதம், தெற்கு கராச்சியில் 500கிலாவாட் மின்பகிர்மானத்தில் தடை ஏற்படவே, பாகிஸ்தானில் இதேபோன்று 12 மணிநேர மின்தடை ஏற்பட்டது.

பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட மின்தடை குறித்து விரிவான அறிக்கை அளிக்கக் கோரி, தேசிய மின்சக்தி ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின்தடை, மின்பகிர்மானத்தில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்புக் கோரியும் அபராதம் விதித்த போலீஸார்

கராச்சி மண்டலத்தில் மலிர், லாந்தி, குலிஸ்தான் ஜோஹர், அக்தர் காலனி, சுந்திகர் சாலை, நியூ கராச்சி, குல்ஷன், இப்ராஹிம் ஹைத்ரி, கோரங்கி பகுதிகளிலும் மின்தடை இருந்தது.

இன்று காலையில் ஏற்பட்ட மின்தடையால் இஸ்லாமாபாத்தில் உள்ள 117 மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்னும் பாகிஸ்தானின் கால்பகுதி நகரங்களுக்கு கூட மின்சாரம் கிடைக்காமல் இருளில் மூழ்கியுள்ளது
 

click me!