
ஜப்பானில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் டோக்கியோவில் இருந்து 107 கிமீ கிழக்கு-தென்கிழக்கே மாலை 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 65 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தான் இளைஞர் இந்தியாவை புகழ்ந்து சிலாகிக்க இதுதான் காரணமா?
எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ மற்றும் அதனை சுற்றி உள்ள கட்டிடங்கள் குலுங்கின. எனினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
உலகில் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றான ஜப்பான் உள்ளது. இதனால் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுவது சாதாரண விஷயம். குறிப்பாக 6 அல்லது அதற்கும் அதிகமான அளவு நிலநடுக்கங்களில் ஜப்பானில் ஐந்தில் ஒரு பங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. 2011-ம் ஆண்டு மார்ச் 11அன்று, ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில், 9 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி என்பதால் இது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மெட்டாவின் சமீபத்திய பணிநீக்கம்.. இந்தியாவின் 2 முக்கிய நிர்வாகிகளும் வேலை இழந்ததால் அதிர்ச்சி..