பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1-ஆக பதிவாகியுள்ளது. இதனால் நியூ கலிடோனியா, ஃபிஜி, வனாடு உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1-ஆக பதிவாகியுள்ளது. இதனால் நியூ கலிடோனியா, ஃபிஜி, வனாடு உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் சுமார் 24 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் 1 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் உயரும் என தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பேரிடர் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து வந்த அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, கடற்கரைக்கு அருகில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நியூ கலிடோனியா முழுவதும் இந்த நிலநடுக்க கடுமையாக உணரப்பட்டுள்ளது. தீவிலிருந்து 103 கிலோ மீட்டருக்கு அப்பால் இந்த அதிர்ச்சி குறைந்துள்ளது என்றும் ஆஸ்திரேலிய புவியியல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. நியூசிலாந்துக்கு பெரிய பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.