பல்கேரியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

பல்கேரியா நாட்டின் வடக்கு சோபியாவிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்வோகே நகரின் இஸ்கார் பள்ளத்தாக்கு அருகே பேருந்து சென்றிக் கொண்டிருந்தது. வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டது.
இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரித்த போது அனைவரும் ஓய்வூதிய குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் சுற்றுலா சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.