அடுத்தடுத்து அதிரடியை அறிவிக்கும் பாகிஸ்தான் பிரதமர்!

By vinoth kumar  |  First Published Aug 26, 2018, 1:26 PM IST

கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தான், நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் செலவுகளைக் குறைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.


கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தான், நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் செலவுகளைக் குறைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவு பிரதமர் மற்றும் அதிபருக்கும் பொருந்தும் என்று இம்ரான் கான் அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

Latest Videos

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி நடந்த நாடாளுமன்ற இம்ரான்கான் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்றார். அவர் பிரதமராக பதவி ஏற்றதும் ஆடம்பரமான பிரதமர் பங்களாவில் தங்க மறுத்துவிட்டார். அங்குள்ள 33 புல்லட் புரூப் கார்களை பயன்படுத்த போவதில்லை என்றும், அவற்றில் 2 கார்கள் மட்டும் பயன்படுத்த போவதாகவும் அறிவித்தார். கவர்னர் மாளிகைகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளுக்கு செய்யப்படும் ஆடம்பர செலவுகள் நிறுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

 

இந்நிலையில் நேற்று இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிப்பதாக அறிவித்தார். தடை உத்தரவு தலைமை ராணுவ தளபதிக்கும் பொருந்துமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் தலைமை ராணுவ தளபதியும் முதல் வகுப்பு விமான பயணம் மேற்கொள்ள முடியாது. அவர்கள் பிசினஸ் கிளாஸில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார். முந்தைய பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆட்சியில் 51 பில்லியன் டாலர்களை செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!