பூமி மாதிரி இன்னொரு கிரகம் இருக்கு! டெஸ் சாட்டிலைட் மூலம் கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்!

By SG Balan  |  First Published May 25, 2024, 12:23 PM IST

நாசாவின் டெஸ் (TESS) என்ப்படும் டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே சாட்டிலைட் மூலம் இந்தப் புதிய கிரகம் பற்றித் தெரியவந்துள்ளது. இந்த கிரகத்தின் எடை பூமியை விட தோராயமாக 3.87 மடங்கு அதிகமாக உள்ளதாகவும் நாசா கூறுகிறது.


நாசாவால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிளீஸே 12பி (Gliese 12b) எக்ஸோப்ளானெட், வானியலாளர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பூமிமையைப் போல மனிதர்கள் வாழக்கூடியதாகக் கருதப்படும் இந்த எக்ஸோப்ளானெட் ஒரு எம் வகை நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.

நாசாவின் டெஸ் (TESS) என்ப்படும் டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே சாட்டிலைட் மூலம் இந்தப் புதிய கிரகம் பற்றித் தெரியவந்துள்ளது. இந்த கிரகத்தின் எடை பூமியை விட தோராயமாக 3.87 மடங்கு அதிகமாக உள்ளதாகவும் நாசா கூறுகிறது. இந்த கிரகம் 0.0668 AU தொலைவில் ஒவ்வொரு 12.8 நாட்களுக்கும் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.

Tap to resize

Latest Videos

கிளீஸே கிரகத்தின் கண்டுபிடிப்பு சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள புறக்கோள்களில் முக்கியமானதாக உள்ளது என்றும் குறிப்பாக இதன் அளவு மற்றும் என் வகை நட்சத்திரத்தைச் சுற்றிவருவது ஆகியவை இதன் முக்கியத்துவத்தை அதிகரிப்பதாகவும் நாசா சொல்கிறது.

இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு வரலாம்! சுற்றுலாவை ஊக்குவிக்க புதிய ஒப்பந்தம்!

Gliese 12b பூமி மற்றும் வியாழன் கிரகங்களைப் போல உள்ளதால், இது குறித்து மேலும் ஆய்வு செய்ய வாய்ப்பாக  உள்ளது. இந்த கிரகம் சுற்றிவரும் நட்சத்திரமான Gliese 12, கிட்டத்தட்ட 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது சூரியனின் அளவில் 27% மட்டுமே உள்ளது. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையில் 60% மட்டுமே கொண்டதாகவும் உள்ளது.

Gliese கிரகத்திற்கு வளிமண்டலம் இல்லை என்று கருதப்படுகிறது. அப்படியானால் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 107 டிகிரி பாரன்ஹீட் (42 டிகிரி செல்சியஸ்) இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வளிமண்டலமும் இருந்தால், திரவ நிலையில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. Gliese 12 நட்சத்திரத்துக்கும் Gliese 12b கோளுக்கும் இடையிலான தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் வெறும் 7% மட்டுமே. அதாவது பூமி சூரியனிடமிருந்து பெறும் ஆற்றலை விட, Gliese 12b தனது நட்சத்திரத்திலிருந்து பெறும் ஆற்றல் 1.6 மடங்கு அதிகம்.

Gliese 12b கிரகத்தின் கண்டுபிடிப்பு TESS செயற்கைக்கோளின் திறன்களை நிரூபிக்கிறது. நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி இதைத் தொடர்ந்து பின்தொடர திட்டமிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குறிப்பாக, Gliese 12b இன் வளிமண்டலம் பற்றி ஆராய உள்ளதாகச் சொல்கின்றனர்.

காவ்யா மாறன் விஷயத்தில் ரஜினிகாந்த் அன்று சொன்னது இன்று வைரல்; அப்படி என்ன சொன்னார் தலைவர்!!

click me!