இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக விசா சலுகை வழங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதற்காக விசா இல்லா பயண ஒப்பந்தம் ஒன்றை ரஷ்யா அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்தியா ரஷ்யா இடையேயான விசா இல்லா பயண ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் விரைவில் கையெழுத்திட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் மாஸ்கோவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 30% உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீதான போரின் எதிரொலியாக பல நாடுகள் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளன. இதனால், அந்த நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், ரஷ்யாவுடன் நட்புறவில் நீடிக்கும் நாடுகளில் இருந்து அதிக சுற்றுலா பயணிகளைக் கவர ரஷ்யா முயற்சி செய்கிறது.
இந்த வகையில் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக விசா சலுகை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக விசா இல்லா பயண ஒப்பந்தம் ஒன்றை ரஷ்யா அறிமுகப்படுத்த இருக்கிறது.
காவ்யா மாறன் விஷயத்தில் ரஜினிகாந்த் அன்று சொன்னது இன்று வைரல்; அப்படி என்ன சொன்னார் தலைவர்!!
ரஷ்யாவின் இத்திட்டம் குறித்து மாஸ்கோ துணை மேயர் எவ்கனி கோஸ்லோ கூறுகையில், "கடந்த ஆண்டில் சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த இடமாக மாஸ்கோ உருவாகியுள்ளது. இந்தியாவில் இருந்து 60,000க்கும் அதிகமான பயணிகள் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்" என்றார்.
ரஷ்யா வரும் இந்தியர்கள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் மாஸ்கோவுக்கு வருகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"இந்த நாடுகளில் இருந்து சுற்றுலாவுக்காக ரஷ்யா வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, விசா இல்லா பயண ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் நடக்கும். இந்த வருடத்திற்குள் விசா இல்லா பயணத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெறும் 1199 ரூபாய்க்கு ஸ்மார்ட்வாட்ச்! மிஸ் பண்ணாம உடனே ஆர்டர் பண்ணுங்க...