sri lanka crisis: ranil wickremesinghe: இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவிஏற்றார்

Published : Jul 15, 2022, 01:20 PM ISTUpdated : Jul 15, 2022, 07:58 PM IST
sri lanka crisis: ranil wickremesinghe: இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவிஏற்றார்

சுருக்கம்

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவிஏற்றார். புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும்வரை இந்தப் பதவியில் ரணில் இருப்பார். 

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவிஏற்றார். புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும்வரை இந்தப் பதவியில் ரணில் இருப்பார். 

இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, மக்கள் போராட்டத்தையடுத்து தனது பதவியே நேற்று அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார். இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இந்தக் கூட்டத்துக்குப்பின் அடுத்த 7 நாட்களில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். 

புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும்வரை, நாட்டை வழிநடத்த இடைக்காலஅதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று பதவி ஏற்றுக்கொண்டார். விக்ரமசிங்கேவுக்கு தலைமைநீதிபதி ஜெயந்தா ஜெயசூர்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை அறிவித்தார் சபாநாயகர்; 7 நாட்களில் புதிய அதிபர்!!

இலங்கை பொருளாதாரத்தை சீரழிவுக்குக் கொண்டு வந்த ராஜகபக்ச குடும்பத்தினர் அரசியலைவிட்டே ஒதுங்க வேண்டும் எனக் கோரி மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தி வந்தனர். இலங்கை பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்று பணவீக்கம் 75 சதவீதத்தை எட்டியது.

உணவுப் பொருட்கள், காய்கறிகள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் விலை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்தது.  12 மணிநேரம் மின்வெட்டு, பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் தட்டுப்பாட்டால், மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தனர்.

இதையடுத்து மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தால் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச கடந்தமாதம் பதவி விலகினார். கடந்த 9ம் தேதி மக்கள் நடத்திய மிகப்பெரி்ய போராட்டத்தைப் பார்த்து, அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சவும் பதவி விலகினார்.

இலங்கை பாராளுமன்றம் நாளை கூடவில்லை; இதுதான் காரணம்

முன்னதாக இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மாலத்தீவு சென்ற கோத்தபய, அங்கிருந்து சிங்கப்பூருக்கும் , அங்கிருந்து சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டுள்ளார். இலங்கையில் சூழல்  பதற்றமாகிக்கொண்டே சென்றதையடுத்து, நேற்று மின்அஞ்சலில் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு கோத்தபய ராஜபக்ச அனுப்பிவித்தார். இதைத்தொடர்ந்து, இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோக்தபய விலகியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அடுத்ததாக நாட்டை வழிநடத்துவதற்காக இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நாளை கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்த விவாதங்கள் நடக்கும்.

sri lanka crisis: கொழும்பில் தொடரும் பதற்றம்.. வேறு வழியில்லாமல் மீண்டும் ஊரடங்கு அமல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!